Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்த கார்த்திகா.. அதிகாலையிலேயே.. எந்த கணவனும் பார்க்கக்கூடாத கோலம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: காதல் திருமணம் செய்யும் ஜோடிகள் பொதுவாக மனம் விட்டு பேசினாலே பல சிக்கல்கள் தீரும். ஆனால் காதலிக்கும் போது இருக்கும் விருப்பங்கள், பேச்சுக்கள், திருமணம் செய்த பின்னர் இருப்பது இல்லை.. எதிர்பார்ப்புகள் எல்லாமே ஏமாற்றங்களாக மாறும் போது, சிலர் தவறான முடிவெடுப்பது நடக்கிறது. வாழ்க்கையில் சிலர் முட்டாளதனமான முடிவும் எடுப்பார்கள்.. திருவாருர் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த காதல் ஜோடிக்கு திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

இன்றைக்கு இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்வது என்பது சர்வ சாதாரணம். கல்லூரியில் படிக்கும் போதோ, வேலை செய்யும் இடத்திலோ காதலிப்பது அதிகமாக நடக்கிறது. காதலிக்கும் போது சந்தோஷமாக திகட்ட திகட்ட காதலிக்கும் ஜோடிகள், திருமணத்திற்கு அப்படியே மாறிவிடுகிறார்கள். சின்ன சின்ன பிரச்சனைகளை சரியாக கையாள தெரியாமல் தவிக்கிறார்கள்.

what happened to Karthika who got married for love in Dindigul

சிலர் பிரச்சனைகளை பேசி தீர்க்காமல் ஈகோ உடன் சுற்றுகிறார்கள். இறுதியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு பதில் வெறுக்கிறார்கள். சிலர் ஏமாற்றம் அடைந்து மிகவும் தவறான முடிவெடுக்கிறார்கள். ஒரு சிலர் தம்பதியாக மாறிய பின்னர், வாழ்க்கையை ஏமாற்றமாக பார்க்கிறார்கள். சிலர் கொஞ்சம் கூட யோசிக்கலாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 26 வயதாகும் சங்கர் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பெரியகோட்டையில் உள்ள செங்கல் சூளையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சங்கரும், மன்னார்குடியை சேர்ந்த உறவினரான கார்த்திகா (25) என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையடுத்து சங்கர் கார்த்திகா தம்பதியினர், சங்கர் வேலை பார்க்கும் செங்கல் சூளை அருகில் உள்ள பெரியகரட்டுப்பட்டி என்ற ஊரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்கள். கார்த்திகா, அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தூங்கியிருக்கிறார்கள்.. நேற்று அதிகாலையில் சங்கர் எழுந்து பார்த்தபோது, அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய செய்தது. அதாவது கார்த்திகா வீட்டில் சேலையால் வாழ்க்கையை முடித்துக் கொண்டாராம்.

இதுகுறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு கணவர் தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது முடிவுக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார்த்திகாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ. இதுதொடர்பாக விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+