திண்டுக்கல்-நத்தம் சாலையில் புதிதாக ரெடியான சுங்கச்சாவடி .. அதிகாரிகள் தந்த விளக்கம்
திண்டுக்கல்:கடந்த 2021-ம் ஆண்டு திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது திண்டுக்கல் நத்தம் இடையே உள்ள 34 கி.மீட்டர் சாலை 3 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது. இதற்காக தேவையான அனைத்து இடங்களிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டன. மேலும் சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுக்டையில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த சுங்கச்சாவடி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.மதுரை சாலையிலும், பழனி சாலையிலும், கரூர் சாலையிலும், திருச்சி சாலையிலும் சுங்கச்சாவடிகள் உள்ளன.. இதேபோல் குமுளி சாலையிலும்சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் வத்தலக்குண்டு அருகே திறக்கப்பட்ட அந்த சுங்கச்சாவடி திறந்த இரண்டாவது நாளிலேயே பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த கவுன்ட்டர்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் வத்தலக்குண்டு அருகே சுங்கச்சாவடி தற்போது செயல்பாட்டில் இல்லை..

இந்நிலையில் இதுவரை சுங்கச்சாவடி இல்லாமல் இருந்த நத்தம் சாலையிலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு திண்டுக்கல்-நத்தம் சாலை விரிவாக்க பணி நடந்தது. அப்போது திண்டுக்கல் நத்தம் இடையே உள்ள 34 கி.மீட்டர் சாலை 3 மீட்டர் அகலப்படுத்தப்பட்டது. இதற்காக தேவையான அனைத்து இடங்களிலும் புதிய பாலங்கள் கட்டப்பட்டன. மேலும் சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுக்டையில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக சாலை சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. அப்படி சீரமைப்பு பணி நடைபெற்ற போது, மேட்டுக்கடையில் உள்ள சுங்கச்சாவடியில் கணினி, புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு கட்டணம் வசூல் செய்யும் அறைகளை தயார் செய்யும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சுங்கச்சாவடியில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி விரைவில் திறக்கப்பட்டு வசூல் நடைபெற போகிறதா என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நத்தம் அருகே மேட்டுக்கடை சுங்கச்சாவடி தற்போது திறக்கப்படவில்லை. திண்டுக்கல்-நத்தம் சாலை மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. எனவே அங்கு சுங்கச்சாவடியை திறப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் முடிவு செய்யும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications