சீக்கிரம் வாங்க.. 108க்கு போன அவசர கால்.. சர்ரென போய் பார்த்த நர்ஸுகளுக்கு.. காத்திருந்த அதிர்ச்சி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு சென்ற போன் கால் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவை அவசர காலத்திற்கு உதவும் மருத்துவ சேவை ஆகும். பல லட்சம் பேரின் உயிரை காப்பாற்றியதில் 108 ஆம்புலன்ஸ் சேவை முக்கிய பங்காற்றி இருக்கிறது.
108 ஆம்புலன்ஸ் சேவை முக்கியமாக இரவு நேரங்களில் மக்களுக்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை
முக்கியமாக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள், இரவு நேரங்களில் ஏற்படும் அவசர மருத்துவ தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ்தான் உதவியாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு 108 ஆம்புலன்சுக்கு சென்ற போன் கால் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வேடசந்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு சாலை சந்திப்பு ஒன்றில் இருந்த புல்வெளி ஒன்றில் இளைஞர் படுத்தபடி கிடந்துள்ளார்.

நெடுஞ்சாலை
இவரின் நெற்றியில் லேசாக காயம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கே உடனே கூடினார்கள். பெரும்பாலும் இவர் பஸ்ஸில் தொங்கியபடி சென்று இருக்கலாம் என்று யூகித்தனர். பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று யூகித்தனர். இல்லையென்றால் இரவு நேரத்தில் ஏதாவது வாகனம் மோதி அவர் விழுந்து இருக்கலாம் என்று யூகித்தனர். அவரை எழுப்ப முயன்றும் எழுப்ப முடியவில்லை.

திண்டுக்கல்
இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இரண்டு நர்ஸ்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கே வந்து, கீழே கிடந்த நபரின் முகத்தில் தண்ணீர் ஊற்றி அவரை எழுப்பிவிட்டனர். அவர் லேசாக மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தார். அவரிடம்.. உங்களை எதுவும் வண்டி மோதியதா என்று நர்ஸ்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் பதில் சொல்லாமல் உளறலாக பேசி உள்ளார். அவர் பதில் சொல்லாமல் உளறலாக பேசி உள்ளார்.

குடி பழக்கம்
இதன் பின்னரே அவர் குடித்து இருந்தது தெரிய வந்தது. முழு போதையில் அவர் குடித்துவிட்டு அங்கு படுத்து கிடந்துள்ளார். நினைவு போகும் அளவிற்கு அவர் படுத்துக்கிடந்த காரணத்தால் மக்கள் அவர் விபத்தில் இருக்கலாம் என்று எண்ணி உள்ளனர். முக்கியமாக அவரின் நெற்றியில் ஏற்பட்டு இருந்த காயம் காரணமாக அவர் விபத்தில் விழுந்து இருக்கலாம் என்று எண்ணி உள்ளனர். அந்த நபருக்கு கடைசியாக நர்ஸ்கள் தண்ணீர் கொடுத்து, விசாரித்து அனுப்பி வைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications