Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதல்.. மனைவியும், மாமியாரும் கூட்டு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த கொலை! பழனியில் பகீர்

Subscribe to Oneindia Tamil

பழனி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மர்ம மரணம் என நம்ப வைத்ததாக மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் & நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக ஜெகதா பழனி தாலுகா போலீசில் அளித்த புகாரில் தனது கணவர் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்வராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

மேலும், சந்தேக வழக்காக வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவக்கப்பட்டது.

செல்போன் எண்

செல்போன் எண்

முதற்கட்டமாக ஜெகதாவின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணையை போலீஸார் மேற்கொண்டனர். அப்போது ஒரு நபருடன் ஜெகதா அடிக்கடி இதன் மூலம் ஜெகதாதான் செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகதாவிற்கும், பைனானஸ் தொழில் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது.

ஆத்திரமடைந்த மனைவி

ஆத்திரமடைந்த மனைவி

மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜெகதா, அவரது தாய் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள், கள்ளக்காதலன் ஜெகதீஷ் ஆகியோர் செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பழனி தாலுகா போலீஸார் ஜெகதா, ராஜம்மாள் மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை

கொலை

கள்ளக்காதலுக்காக கணவரை மனைவியும் அவரது மாமியாரும் சேர்ந்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொல்வதும் மனைவி கணவனை கொல்வதும் தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் கள்ளக்காதலர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கொலைகளும் நிகழ்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+