காரில் ’மாஜி’ காதலன்.. மனைவிக்கு ஸ்கெட்ச் போட்ட கணவன்! துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிய அஜித்குமார்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருபத்தூர் மாவட்டம் கணவனின் குடும்பத்தின் மீது பொய்ப் புகார் அளித்த பெண், தனது பள்ளிக் கால காதலனுடன் தனியே வசித்து வந்துள்ளார். இதனை கணவன் கண்டு பிடித்த நிலையில், சுவர் ஏறிக் குதித்து தப்பித்துள்ளார் காதலன். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் கணவன்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்த கேசவன் இந்திரா தம்பதியரின் மகள் கீர்த்திபிரியா. இவரும், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி அசோக்நகர் பகுதியை சேர்ந்த சாந்தி ஐயப்பன் தம்பதியரின் மகன் அஜித்குமாரும் பள்ளி பருவத்தில் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின் இதுகுறித்து தகவல் அறிந்து கீர்த்தி பிரியாவின் தாய்மாமன் ரீகன், கீர்த்திபிரியாவை ரகசியமாக அஜித்குமாரிடமிருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

tirupattur crime police

அதன்பின்னர் கீர்த்திபிரியாவின் தாய்மாமன் ரீகன் இந்த சம்பவத்தை மறைத்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரிகிராமம் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கு கீர்த்திபிரியாவை அவருடைய தாய்மாமன் ரீகன் மற்றும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஓட்டுனரான கதிரவன் ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். மேலும் குடும்பத்துடன் ஓசூர் ஜேஜே நகர் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று வயதில் கோவிஷா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கீர்த்திபிரியா தனது மாமியார் புவனேஸ்வரி மற்றும் மாமனார் செழியன் ஆகியோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பின் உன்னுடைய அப்பா சம்பாதித்து வைத்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என கதிரவனிடம் கீர்த்தி பிரியா பிரச்சனை செய்துள்ளார்.

அதன்பின்னர் கதிரவன் மற்றும் கீர்த்திபிரியா வீட்டைவிட்டு வெளியேறி ஓசூர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது ஓசூர் பகுதியில் வேலை செய்து வந்த முன்னாள் காதலனான அஜித்குமார் கீர்த்திபிரியாவை அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கதிரவனுக்கும் கீர்த்தி பிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

அதனைதொடர்ந்து கடந்த ஆண்டு 17. 9 .2024 தேதி அன்று கணவன் கதிரவன், மாமனார் செழியன், மாமியார் புவனேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கீர்த்திபிரியா புகார் அளித்துள்ளார். கீர்த்திபிரியா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது அந்த வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த ஒரு வருட காலமாக கணவன் கதிரவனை பிரிந்து கீர்த்திபிரியா பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டில் தன்னுடைய குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஏலகிரி கிராமம் பகுதிக்கு செல்வதற்காக கதிரவன் பால்நாங்குப்பம் பகுதியில் உள்ள கீர்த்தி பிரியா வீட்டின் வழியாக சென்றுள்ளார். அப்போது கீர்த்திபிரியாவின் வீட்டின் எதிரில் கார் ஒன்று இருந்துள்ளது. அதனை பார்த்த கதிரவன் உள்ளே அஜித்குமார் இருப்பதை உறுதி செய்து கொண்டு உடனடியாக இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் அஜித்குமாரை பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது அஜித்குமார் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த காரை ஜோலார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அஜித்குமார் மீது கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+