Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் கலரில் 7 அடி நீளத்தில் கொடைக்கானலில் சாரைப்பாம்பு.. ஸ்லோ மோஷனில் போனதுமே.. அலறிய திண்டுக்கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கோடைக்காலத்தில் வறட்சி காரணமாக பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுவது போலவே, நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கும் சென்றுவிடுவதுண்டு. பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகளை சுற்றி வனப்பகுதிகள் உள்ளதால், பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருப்பதுண்டு. எனவேதான் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி, அருவி, உள்ளிட்ட நீர்ப்பகுதிகளுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.. இதோ கொடைக்கானலில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது நடந்துள்ளது.

சமீபகாலமாகவே பாம்புகள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகளும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி காண்போருக்கு கிலியை உண்டுபண்ணி விடுகின்றன.

Dindigul Kodaikanal Snake

இதில் நீர்நிலைகளுக்கு வரும் பாம்புகள் குறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாவதுண்டு. அந்தவகையில், கடந்த வாரம் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

ஸ்லோ மோஷனில் 7 நீளமுள்ள பாம்பு

வடகிழக்கு பருவமழை கொட்டி வரும் சூழலில், சமீப காலமாகவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் நல்ல மழை செய்து வருகிறது.. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. வெள்ளப்பெருக்கு அதிகமாகிவிட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது, வெள்ளப்பெருக்கு குறையும் சூழலில் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரி

அப்படித்தான் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து கொண்டிருந்தனர்.. அப்போது மெயின் அருவியின் மேல் பகுதியில் இருந்து திடீரென ஒரு மலைப்பாம்பு கீழே விழுந்துள்ளது.. இதைப்பார்த்து அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்,

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சொல்லவும், அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தந்து வரவழைத்துள்ளனர்.. பிறகு, 10 அடி நீள அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து கொண்டு சென்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது..

இதோ இப்போது கொடைக்கானல் நீர்வீழ்ச்சிக்கு பாம்பு ஒன்று வந்துள்ளது..கொடைக்கானல் ஏரி சாலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.. கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில், சுற்றுலா பயணிகள் குவிவது வாடிக்கையாகும்.. சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் இங்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கமாகும்.

மஞ்சள் நிற சாரைப்பாம்பு

அப்படித்தான் நேற்றைய தினம் ஏராளமானோர் அங்கே நின்று இயற்கையின் அழகை கண்டுகொண்டிருக்கும்போது, திடீரென மஞ்சள் நிறத்திலான ஒரு சாரைப்பாம்பு படகு குழாம் நடைமேடையில் மெல்ல ஊர்ந்து சென்றுள்ளது.. அதன் உடம்பில் காயங்களும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்வாசிகள், உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்து வரவழைத்தனர்..

அவர்கள் விரைந்து வந்து, 7 அடி நீளமிருந்த அடிபட்ட பாம்பினை பத்திரமாக மீட்டு, ஒரு பெரிய பைக்குள் போட்டு கொண்டு சென்றனர். இந்த மஞ்சள் கலர் சாரைப்பாம்பு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பச்சை பாம்பு பீதி

கொடைக்கானல் நீர்வீழ்ச்சியிலும்கூட இப்படி பாம்புகள் அடிக்கடி வருவதுண்டு.. காரணம், கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருக்கிறது.. இந்த கொடைக்கானல் நுழைவாயில் பகுதியாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் பாம்பு வருவதுண்டு.. ஒருமுறை பச்சை பாம்பு புகுந்து, சுற்றுலா பயணிகளை அலறி ஓடவிட்டது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+