நபிகளாரின் மகள் பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ்.. துபாயில் தமிழில் ஓதப்பட்டது
துபாய்: நபிகளாரின் மகளான பாத்திமா நாயகியாரின் நினைவு நாளையொட்டி, பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் ஓதும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக துபாயில் நடைபெற்றது.
துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில், அஷ்ஷைகு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனிய்யுல் ஹூசைனிய்யுல் ஹாஷிமி நாயகம் அவர்களின் அறிவுறுத்தல் வழிகாட்டிதல் படி, அஸ்ஸய்யிது ஜமாலிய்யா சையது கலீல்அவுன் மவுலானா நாயகம் கத்தஸல்லாஹூ சிர்ருஹூல் அஜீஜ் அவர்கள் உருவாக்கிய, 300க்கும் மேற்பட்ட கண்ணிகள் கொண்ட பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் அன்னையின் நினைவு நாளில் மிகவும் விமரிசையாக துபாயில் நடைபெற்றது.

அமீரக துபை நகரில் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 4:15 மணிக்கு புகழ் மாலை ஓதும் மஜ்லிஸ் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜமா அத்தர்கள், சகோதர சமயத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், பரிசுத்த நாயகியாரின் வாழ்வியலை முழுமையாக தெளிவுபடுத்தும் வகையில், அவருடைய வாழ்வியல் குறித்து தமிழில் பக்தியுடன் மாலை ஓதினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கலிபா முனைவர் ஸஹாப்தீன் தலைமை வகித்து, வரேவற்றார். ஸெய்யித் அலி மௌலானா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து இந்த புனித மாதத்தை முன்னிட்டு தராவிஹ் தொழுகை மற்றும் பயான் நிகழ்வுக்காக வருகை தந்த மௌலவி ஹஜ்ரத் முஹம்மது அபுபக்கர் பைஜி உலவி சொற்பொழிவாற்றினார்.

முஹம்மது இக்பால் பேசுகையில், சூரத்துல் ஹவ்ஸரில், கவ்ஸர் என்பது என்ன, பாத்திமா நாயகியார் மூலம் நபி பெருமானார் சல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறை கியாமத் வரை தொடரும் என்றும், நபி அவர்களை மனம் நோக செய்த மக்கள் அபத்தர்களாக இறைவன் ஆக்கிவிட்டான் என்பது குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர், இஃப்தார் விருந்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத், யுஏஇ பிரிவு, கோட்டைப்பள்ளி மௌலித் கமிட்டி, துபாய், ஜனாப் ஜமால் மைதீன், பொதுச் செயலாளர், ஜமால் முஹம்மது காலேஜ் முன்னாள் மாணவர் சங்கம், ஜனாப் பரக்கத் அலி உதவிச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, இரவி முத்து, தலைவர், அமீரக செந்தமிழர் பாசறை, தமிழகத்தில் இருந்து வருகை தந்த இயூமு லீக் மாநில ஆலோசகர் எம்ஜே அப்துல் ரவூப் மற்றும் அமீரகத்தின் பல பகுதிகளை சார்ந்த சபையினர், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத்களை சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.

-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications