ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரள பெண்ணுக்கு அடித்த மெகா 'ஜாக்பாட்'.. லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு லாட்டரி டிக்கெட்டில் ரூ.44.75 கோடி பரிசு விழுந்துள்ளது. இதேபோல் கேரளாவைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் லாட்டரி டிக்கெட்டில் ரூ.2 கோடி பரிசு கிடைத்துள்ளது.

என்னதான் நாம் கடும் உழைப்பை கொட்டினாலும் அதிர்ஷ்டம் வருவது என்பது நமது கையில் இல்லை.
மனிதர்களுக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஒரு சிலரைத்தான் வந்தடையும்.

கேரளாவை சேர்ந்த பெண்

கேரளாவை சேர்ந்த பெண்

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு லாட்டரியில் ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. இதனை பற்றிய விவரத்தை பின்வருமாறு காண்போம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லீனா ஜலால், இவர் ஐக்கிய அரபு தலைநகரமான அபுதாபியில் உள்ள நிறுவனத்தில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்.

ரூ.44 கோடி பரிசு

ரூ.44 கோடி பரிசு

இவர் வாராந்திர குலுக்கல் முறையில் நடக்கும் லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார். கடந்த 3-ம் தேதி அந்த லாட்டரி சீட் குலுக்கல் முறை நடந்தபோது லீனா ஜலால் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்தது. அதாவது 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ஆகும். இதனால் லீனா ஜலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மற்றொருவருக்கும் அதிர்ஷ்டம் கிட்டியது

மற்றொருவருக்கும் அதிர்ஷ்டம் கிட்டியது

இந்த பரிசு தொகையை பத்து பேருடன் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர் அ பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லீனா ஜலாலுக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் வீட்டு வாசலை தட்டியுள்ளது. கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரைஃப் சுரு வாங்கிய டிக்கெட்டிற்கு 1 மில்லியன் திர்ஹம் ( இந்திய மதிப்பில் ரூ.2 கோடி ) பரிசு கிடைத்துள்ளது.

தமிழக தொழிலாளிக்கு ரூ.20 கோடி பரிசு

தமிழக தொழிலாளிக்கு ரூ.20 கோடி பரிசு

இந்த பரிசுத் தொகையை அவர் 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதில் ஒரு பகுதியை தனது ஏழை நண்பர்களுக்கு உதவ உள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்ப கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு பரிசு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+