"டாக்சிக்".. ரொம்ப மோசமாகிவிட்டது.. மிக முக்கியமான வாதத்தை தொடங்கி வைத்த அஜித்.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் 3ம் இடம் பிடித்த பின் நடிகர் அஜித் அளித்த பேட்டி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். அஜித் குமார் அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது.

ajith kumar

துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் WRTயின் அல் ஃபைசல் அல் ஜுபைர், டான் ஹார்பர், மேக்ஸ் ஹெஸ்ஸி, பென் டக் மற்றும் டேரன் லியுங் ஆகியோரின் அல் மனார் ரேசிங் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

அல் மனார் ரேசிங் அணி துபாய் சர்க்யூட்டின் 589 சுற்றுகளை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தை Pure Rxcing அணியின் தாமஸ் ப்ரீனிங், ஹாரி கிங் , அலெக்ஸி நெசோவ் மற்றும் அலியாக்சாண்டர் மாலிகின் ஆகியோர் வென்றுள்ளனர்.

துபாயில் நடந்த இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். முதல் பரிசு வென்றவர்களை விட.. 3ம் பரிசு வென்ற அஜித்திற்கே ஆரவாரம் அதிகம் இருந்தது.

அவர்கள் பக்கம் பெரிதாக நேற்று கேமரா செல்லவில்லை. மாறாக மொத்த கேமரா குழுவும் அஜித் பக்கம் இருந்தது. அந்த ரேஸுக்கே எடுத்துக்காட்டு போல.. ஒரு பிராண்ட் போல அஜித் அங்கே நின்று கொண்டு இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட் பயன்படுத்தியதும் இதில் குறிப்பிடத்தக்கது.

அஜித் அறிக்கை:

இதையடுத்து நடிகர் அஜித்குமார் வெளியிட்ட நன்றி அறிக்கையில், துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது.

என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் நன்றி, என்று குறிப்பிட்டு உள்ளார்.

அஜித் பேட்டி:

துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் 3ம் இடம் பிடித்த பின் நடிகர் அஜித் அளித்த பேட்டி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அவர் தனது பேட்டியில், தற்போது நாம் சில விஷயங்களை பேச வேண்டும் .. முக்கியமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் விதம் மோசமாகிவிட்டது. அஜித் வாழ்க.. விஜய் வாழ்க என்கிறார்கள். நீங்கள் எப்போது வாழ போகிறீர்கள். நாயக வழிபாடு இருக்கட்டும்.. உங்கள் குடும்பத்தை பாருங்கள். அதோடு முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தை.. அதிலும் உங்கள் மன ஆரோக்கியம் முக்கியம்.

மன ஆரோக்கியம்தான் பலருக்கும் மோசமாகி வருகிறது. இதை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் இப்போது நடப்பது மிக மோசம்.. இது டாக்சிக். இது சமுதாயம் முழுக்க பரவிவிட்டது. உடல்நலம்.. சிக்ஸ் பேக் வைத்திருப்பது மட்டும் முக்கியமல்ல.. மனநலம் முக்கியமாக இருக்க வேண்டும், என்று அஜித் பேசி உள்ளார்.

பெரிய நடிகர்கள் யாரும் மனநலம் பற்றி பெரிதாக பேசாத சமயத்தில் நடிகர் அஜித் மட்டுமே இந்த விஷயத்தை பற்றி பேசி மக்களிடையே கவனம் பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+