"அந்த ஒரு ரியாக்சன் போதும்".. மேட்சுக்கு இடையே கோலி நடந்த விதம்.. நொறுங்கிய ஃபேன்ஸ்.. என்ன நடந்தது?
துபாய்: நேற்று ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் கோலி நடந்து கொண்ட விதம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
2022 ஆசிய கோப்பை தொடரில் நேற்று ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி வென்றது. நேற்று நடந்த ஹாங்காங் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192-2 ரன்களை எடுத்தது.
அதன்பின் களமிறங்கிய ஹாங்காங் அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே ஆடியது. அதிலும் ஹாங்காங் டாப் ஆர்டர் வீரர்கள் நன்றாகவே பேட்டிங் செய்தனர். சேசஷன் அலி, பாபர் ஹயாத் ஆகியோர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் 152-5 ரன்கள் வரை ஹாங்காங் அணி எடுத்தது.

என்ன நடந்தது?
நேற்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணம் கோலி மற்றும் சூர்யா குமார் யாதவ் இருவரும்தான். சிறப்பாக ஆடிய கோலி நேற்று 44 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடக்கம். 1 பவுண்டரி அடக்கம். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கிய கோலி பின்னர் பேட்டிங் வேகத்தை கூட்டினார். 134.09 ஸ்டிரைக் ரேட்டில் கோலி ஆடியது அணிக்கு உதவியாக இருந்தது. இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவ் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பேட்டிங் செய்தார்.

கடைசி ஓவர்
அதிலும் கடைசி ஓவரில் மட்டும் இவர் 4 சிக்ஸர் அடித்தார். முதல் 3 பந்துகள் அடுத்தடுத்து ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார். 26 பந்துகளில் இவர் நேற்று 68 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 6 சிக்ஸ், 6 பவுண்டரிகளை இந்த ஆட்டத்தில் ஆடினார். அதிலும் வைட்டாக ஆப் சைடில் வந்த முதல் இரண்டு பந்துகளை இவர் நகர்ந்து போய் "சீவிய" விதமும், அது சிக்ஸ் பறந்ததும் மைதானத்தில் இருந்தவர்களை வியக்க வைத்தது. கோலியே வியந்தபடி சூர்யா குமார் யாதவை பார்த்தார்.

இந்திய அணி
இந்திய அணியின் பேட்டிங் முடிந்ததும் கோலி முன் கூட்டியே நடந்து சென்று பின்னால் வந்த சூர்யா குமார் யாதவிற்காக காத்து இருந்தார். சூர்யா குமார் யாதவ் வந்ததும் அவரை பார்த்து குனிந்து, நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினார். அவரின் இந்த செயல் பலரையும் வியக்க வைத்தது. அட கோலியா இது என்று பலரும் வியந்து பார்த்தனர். அவரின் பேன்ஸ் கூட கோலி ரொம்ப மாறிவிட்டார் என்று இணையத்தில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

ஐபிஎல்
முன்னதாக 2020 ஐபிஎல் போட்டியில் பெங்களூர் - மும்பை அணிக்கு இடையிலான ஆட்டத்தில் கோலிக்கும் இளம் வீரர் சூர்ய குமார் யாதவிற்கு இடையே நடந்த மோதல் பெரிய அளவில் வைரலானது. அந்த போட்டியில் சேஸிங்கின் போது கோலி சிறுபிள்ளை போல அடிக்கடி சூர்ய குமார் யாதவை சீண்டினார். 10 ஓவர் முடியும் முன்பே கோலியின் சீண்டல் தொடங்கிவிட்டது. சூர்ய குமார் அடிக்கும் பந்துகளை தடுக்கும் போதெல்லாம் கோலி பந்தை சூர்ய குமார் மீது வீசுவது போல செய்து காட்டினார்.

சூர்ய குமார் யாதவ்
பல முறை சூர்ய குமார் யாதவை கோலி கடுமையாக முறைத்தார். அதோடு இன்னொரு பக்கம் சாஹல், மோரிஸ் போன்ற வீரர்களும் சூர்ய குமார் யாதவை முறைத்தனர். கோலி சொல்லி செய்தது போல.. அவரை மட்டும் தனியாக குறி வைத்தனர். அப்படி அன்று நடந்து கொண்ட கோலிதான் நேற்று சூர்யா குமார் சிக்ஸ் அடித்ததும் அவரின் ஹெல்மெட்டில் தட்டி அவரை பாராட்டினார். அதோடு மேட்ச்சிற்கு பின்பாக அவரை குனிந்து வணங்கினார். நேற்று கோலி மைதானத்தில் இப்படி நடந்தது பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications