Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுமை.. இந்திய அணியை துரத்திய "அந்த" தப்பு.. இலங்கையிடம் வீழ்ந்தது எப்படி? 5 "மெகா" காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.

ஆசிய கோப்பை தொடரில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி மோசமாக ஆடி வருகிறது. கிட்டத்தட்ட இந்திய அணி பைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

காரணம் 1 - டாஸ்

காரணம் 1 - டாஸ்

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றால் அது டாஸ்தான். துபாயில் பொதுவாக சேஸிங் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது. துபாய் பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் அப்படியே ஆட்டம் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும். இதனால் எதிர்பார்த்தபடியே இலங்கை அணி பவுலிங் எடுத்தது. இதனால் அதிக ரன்கள் எடுக்க முயன்ற இந்திய அணி கடைசியில் சொதப்பி வெறும் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

காரணம் 2 - மிடில் ஆர்டர்

காரணம் 2 - மிடில் ஆர்டர்

அதேபோல் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கடந்த இரண்டு போட்டிகளாக மிக மோசமாக இருந்தது. மிடில் ஆர்டரில் சூர்யா குமார் யாதவ் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் மட்டுமே நன்றாக ஆடினார். அணியில் களமிறக்கப்பட்ட பண்ட், தீபக் ஹூடா இருவருமே நேற்று சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் மொத்தமாக சொதப்பியதால் நேற்று மிடில் ஓவர்களில் இந்திய அணி ரன்களை எடுக்க முடியாமல் திணறியது.

காரணம் 3 - டெத் ஓவர்கள்

காரணம் 3 - டெத் ஓவர்கள்

நேற்று 12.2 ஓவர்களில் இந்திய 119-4 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் 7 ஓவர்களில் இந்திய அணி 60 ரன்கள் கூட எடுக்கவில்லை. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். டெத் ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. 5 விக்கெட்டுகள் போனாலும் ரன்கள் வரவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான விஷயமாக மாறியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இதே தவறைத்தான் செய்தது.

காரணம் 4 - கேப்டன்சி

காரணம் 4 - கேப்டன்சி

நேற்று கேப்டன்சியும் சரியாக இல்லை. மும்பை அணியில் கேப்டன்சி செய்யும் போது ரோஹித் டென்சன் இன்றி இருப்பார். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக மிகவும் டென்ஷனாக காணப்பட்டார். கடைசி ஓவர்களில் சக வீரர்களிடம் மோசமாக கத்தினார். மற்ற வீரர்கள் சொல்வதை கூட காது கொடுத்து கேட்கவில்லை. இது போன்ற இக்கட்டான நேரங்களில் கோலி இதைவிட சிறப்பாக கேப்டன்சி செய்து இருக்கிறார். ஆனால் நேற்று ரோஹித் மோசமாக சொதப்பினார்.

காரணம் 5 - அந்த தப்பு

காரணம் 5 - அந்த தப்பு

இந்திய அணியை இந்த தொடரில் துரத்திய ஒரு விஷயம் என்றால் அது பவுலிங்தான். இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான். அணியில் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. ஜடேஜாவும் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இந்த நிலையில்தான் அணியில் எடுக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. அதேபோல் ஆவேஷ் கான் அதிக ரன்களை கொடுத்தார். நேற்று போட்டியில் மட்டுமே சாஹல் கொஞ்சம் சுமாராக பவுலிங் செய்தார்.

சிக்கல்

சிக்கல்

மற்றபடி இந்த தொடர் முழுக்கவே அவர் மோசமாக பவுலிங் செய்தார். எப்போதும் டெத் ஓவர்களில் நன்றாக வீசும் புவனேஷ்வர் குமார் இரண்டு போட்டிகளாக டெத் ஓவர்களில் மாட்டயம் 15, 19 என்று ரன்களை வாரி இறைத்தார். அவர் பெரிதாக விக்கெட்டுகளும் எடுக்கவில்லை. இதுவே இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. ஷமி, சிராஜ் போன்ற வீரர்களை எடுக்காமல் இந்திய அணி ஆசிய கோப்பைக்குள் சென்றது இந்திய அணிக்கே பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+