என்னது இது? அப்படியே அண்ணாந்து பார்த்த அஸ்வின்! அதிர்ச்சியான சாஹல்! மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்
துபாய்: இந்தியா இலங்கைக்கு இடையில் நடந்த ஆசிய கோப்பை 2022 தொடரில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பைனலுக்கு செல்வதே தற்போது சந்தேகம் ஆகியுள்ளது.
ஆசிய கோப்பை 2022 தொடரில் நேற்று இலங்கைக்கு எதிராக நடந்த சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 173-8 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 1 பந்து மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சாஹல்
இந்த போட்டியில் சாஹல் நேற்று சிறப்பாக பவுலிங் செய்தார். இந்த தொடரில் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை. இந்த தொடரில் கடந்த மூன்று போட்டியிலும் சஹால் சரியாக பவுலிங் செய்யவில்லை. முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக பவுலிங் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சாஹல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேபோல் ஹாங்காங் குட்டி அணி. ஆனால் அந்த அணிக்கு எதிராகவும் இவர் விக்கெட் எடுக்கவில்லை. இவரின் பவுலிங் அவ்வளவு பிரஷர் தரும் விதமாக இல்லை.

நீக்கம்
இந்த நிலையில்தான் நேற்று போட்டியில் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் ரோஹித் சர்மா இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அணியில் இதனால் ரவி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம்பெற்றார். இந்த நிலையில் எதிர்பார்ப்பை மீறி நேற்று சாஹல் சிறப்பாக பவுலிங் செய்தார். நன்றாக ஆடிய இலங்கை ஓப்பனிங் இணையை அவுட்டாகியது சாஹல்தான்.

நல்ல பவுலிங்
சாஹல் வீசிய 12வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார் சாஹல். ஓவரின் முதல் பந்தில் நிசாங்கா விக்கெட்டை எடுத்தார். அதன்பின் அசலங்கா விக்கெட்டை 4வது பந்தில் சாஹல் எடுத்தார். இரண்டுமே கேட்ச் விக்கெட்டுகள். நேற்று மொத்தம் மெண்டிஸ் விக்கெட்டோடு சேர்ந்து 3 விக்கெட்டுகளை இவர் எடுத்தார். இதில் அசலங்கா கொடுத்த கேட்சை நேற்று சூர்யா குமார் யாதவ் எடுத்தார். இதன் மூலம் அசலங்கா டக் அவுட் ஆனார்.

ரியாக்சன்
அப்போது சூர்யா குமார் யாதவ் உற்சாகத்தில் பந்தை மேலே தூக்கி வீசினார். விக்கெட் எடுத்த சாஹல் உற்சாகத்தில் கத்திக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேலே சென்ற பந்து அவரை நோக்கி வந்தது. இதனால் அவர் ஷாக் ஆனார். இதை பார்த்த அருகில் இருந்த அஸ்வின்.. ஷாக்காகி அண்ணாந்து பார்த்தார். பாண்டியா உடனே இந்த பந்தை பிடிக்க போனார். ஆட்டத்திற்கு நடுவே இவர்கள் கொடுத்த ஷாக் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications