தமிழகத்தில் ரூ 1,600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம்.. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
துபாய்: தமிழகத்தில் ரூ 1600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் 6 வகையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்பு கையெழுத்தானது.
Recommended Video
4 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய், அபுதாபி சென்றுள்ளார். கடந்த புதன்கிழமை துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.
துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழகத்தின் அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு அந்த அரங்கை திறந்து வைத்து பல்வேறு தொழிலதிபர்கள் முதல்வர் சந்தித்து பேசினார்.

முதலீட்டாளர்கள்
இந்த நிலையில் துபாயில் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசுத் துறை அதிகாரிகள் உள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு துபாய் தொழிலதிபர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் லூலூ நிறுவனங்களின் தலைவர் யூசுஃப் அலி கலந்து கொண்டுள்ளார். அவருக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நினைவுப் பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு முதலீட்டாளர்களுடன் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் ரூ 1600 கோடி அன்னிய முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நோபல் குழுமம் சார்பில் ரூ 1000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப நாடு துபாய் மண்ணை வளமாக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையே உறவு எப்போதைக்கும் விட இப்போது வலுவாக வளர்ந்து வருகிறது.

உலகமே வியக்கும் நிலை
பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கு இந்த அரங்கில் இத்தனை கூட்டம் இருப்பதே சாட்சி. அழகான நகரத்தில் வசிக்கிறீர்கள். வர்த்தம் அதிகம் அமைந்திருக்கும் நகரமாகவும் இது உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்த இந்த நாட்டில் தற்போது உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நவீன கட்டட கலை சாதனையுடன் அமைந்துள்ளது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது.

2030 ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரம்
முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக துபாய்க்கு வந்துள்ளேன். தமிழகம்- துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே வந்துள்ளேன். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே எங்கள் லட்சியம். தமிழகத்தில் முதலீடு செய்ய நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. ரியல் எஸ்டேட், சுற்றுலா, விருந்தோம்பல், குளிர் பதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள், எரிசக்தி, தகவல் தொடர்பு மையங்கள், வான் வெளி, பாதுகாப்பு துறைகளில் நவீன கட்டமைப்பு, மின் வாகனங்கள் , மின் ஏற்றி நிலையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யலாம். அதிக முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் தூத்துக்குடி அறைகலன் பூங்கா அமைந்துள்ளது. வாருங்கள் எங்கள் தமிழகத்தில் முதலீடுகளை செய்யுங்கள். உங்களுக்காக தமிழகத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதால் வெளிநாட்டுக்கு வந்தது போல் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications