குவைத் தீ விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பலி- யார் யார்? அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: குவைத் தீ விபத்தில் மொத்தம் 45 இந்தியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் மன்கஃப் பகுதியில் 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது தீ. இந்த விபத்து நடந்த போது மொத்தம் 150-க்கும் அதிகமானோர் அக்கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதில் மொத்தம் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேரும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள் விவரம்:
வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி)
சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்)
சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்)
முகமது ஷெரீப் (திண்டிவனம்)
கருப்பணன் ராமு (ராமநாதபுரம்)
ராஜூ எபநேசன் (திருச்சி)
ரிச்சர்ட் ராய் (பேராவூரணி)


குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத்துக்கு மத்திய இணை அமைச்சர் கேவி சிங், கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
குவைத்தில் பலியான அனைத்து இந்தியர்களின் உடல்களும் நாளை கொண்டுவரப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களும் நாளை கொண்டுவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை இதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குமான உதவிகளையும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செய்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications