Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு!

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியாவில் இருந்து அதிக அளவிலான மக்கள் மத்திய கிழக்கில், குறிப்பாக அமீரகத்தில் வசிப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமீரக நகரங்களில் ஒன்றான துபாய் திடீரென வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து துபாய்க்கு அதிக விமானங்களை இயக்கும் இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

வளைகுடாவில் தாக்குதல்கள் நின்றுவிட்டாலும் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. இரு வாரங்களுக்கு மட்டுமே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை இறுதி செய்யப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

Dubai Airport Caps Foreign Airline Flights Until May 31 Indian Carriers will Face Revenue Loss

திடீர் தடை

இது ஒரு பக்கம் இருக்கத் துபாய் தரப்பு நேற்று மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலால், துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அங்குள்ள அல் மக்தூம் விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு விமானங்கள் வருவதில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

துபாய் விமான நிலைய ஆணையம் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஏப்ரல் 20 முதல் மே 31 வரை ஒவ்வொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே துபாய்க்கு வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தடை உத்தரவு இந்திய விமான நிறுவனங்களைத் தான் மிகக் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், துபாய் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இந்திய நிறுவனங்களுக்குச் சிக்கல்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் சுமார் 750 விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தன. இண்டிகோ 481 விமானங்களையும், ஸ்பைஸ்ஜெட் 61 விமானங்களையும் இயக்கவிருந்த நிலையில், இந்தத் தடையால் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகார்களை முன்வைத்துள்ளது. அதாவது நிலைமை மோசம் என்றால் எல்லா விமான நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆனால், வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை எனச் சொல்லியுள்ளனர். இது சரியான போக்கு இல்லை என முறையிட்டுள்ளன. துபாயைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் வழக்கம்போல நூற்றுக்கணக்கான விமானங்களை இந்தியாவுக்கு இயக்கி வருகின்றன.

புகார்

"இது சமமான போட்டி சூழலை அழிக்கிறது.. .. எங்களைக் கட்டுப்படுத்திவிட்டு அவர்கள் மட்டும் லாபம் ஈட்ட அனுமதிப்பது முறையல்ல" என இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு சாடியுள்ளது. ஒருவேளை துபாய் அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தாவிட்டால், துபாய் விமான நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய நிறுவனங்கள்

இந்திய விமான நிறுவனங்கள் ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து வருகின்றன.. கடந்தாண்டு முதல் பாகிஸ்தான் வான் பாதை மூடப்பட்டுள்ளதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், எரிபொருள் செலவு எகிறியுள்ளது. இத்தோடு சேர்ந்து மத்திய கிழக்கு நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதும் விமான நிறுவனங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், "எங்களின் 15 தினசரி விமானச் சேவைகளில் பெரும்பாலானவை முடக்கப்பட்டுள்ளதால், விமானங்கள் மற்றும் ஊழியர்களின் உழைப்பு வீணாகிறது" எனத் தெரிவித்துள்ளது. லூஃப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே துபாய் சேவையை மே 31 வரை ரத்து செய்துள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள் மட்டும் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப் பயணிகள்

துபாய் அரசின் இந்த முடிவால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மட்டும் பாதிப்பை இல்லை.. இந்தியப் பயணிகளுக்கும் பாதிப்பு தான்.. விமானச் சேவை குறைந்தால் டிக்கெட் விலை தானாகவே அதிகரிக்கும். இதனால் இந்தியப் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே,இதில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+