துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!
துபாய்: அமெரிக்கா-ஈரான் போர் தற்போது 4வது வாரத்தை எட்டியிருக்கிறது. இப்படி இருக்கையில், ஈரானின் மின் கட்டமைப்புகளை நோக்கி தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், அமெரிக்கா எங்களை தாக்கினால்.. எங்களின் தாக்குதல் துபாய் உட்பட மொத்த வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று வார்னிங் கொடுத்திருக்கிறது.
அமெரிக்கா டாலருக்கு எதிராக, ஈரான் மேற்கொண்டு வந்த மாற்று நடவடிக்கைதான் இந்த போருக்கு காரணம். போரில் அமெரிக்காவுக்கு சவுதி, அமீரகம், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. எனவேதான் இந்த நாடுகளை குறி வைத்து ஈரான் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் வார்னிங்
இப்படி இருக்கையில், ஈரானின் மின் நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரினையை எப்படியாவது திறக்க வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு இருக்கும் நெருக்கடி. இதன் காரணமாகதான் மின் நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளார்.
வார்னிங் கொடுத்த டிரம்ப்
"ஈரான், நீரிணையை உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இந்த தாக்குதல் தொடரும்" என்று டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
நீரிணை மூடப்பட்டதால், அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. வேலியில் போன ஓணானை பிடித்து, வேட்டியில் விட்டுக்கொண்ட கதையாக, எரிபொருள் விலை உயர்வு டிரம்ப், சர்வதேச அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
ஈரானின் எச்சரிக்கை
எனவேதான் இந்த எச்சரிக்கை. ஆனால், ஈரான் சும்மா இருக்குமா? எங்களின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால், பதிலுக்கு உங்களின் நட்பு நாடுகளான சவுதி, அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகியவற்றின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்குவோம் என்று வார்னிங் கொடுத்திருக்கிறது. மேலே லிஸ்ட் போட்ட நாடுகள் எல்லாம் பாலைவன நாடுகளாகும்.
எனவே குடிநீருக்கு 70-90% வரை கடல் நீரைதான் நம்பியிருக்கின்றன. இந்த கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் துபாய் உட்பட பல நகரங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
குடிநீர் பஞ்சம்
எனவே மொத்த வளைகுடாவும் தற்போது பதற்றத்தில் சிக்கியிருக்கிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதை போல, குடிநீர் விலையையும் டிரம்ப் உயர்த்தாமல் இருந்தால் சரி என்று வளைகுடா மக்கள் கூறுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் குடிநீர் விலை நிலவரம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.35-55 வரை விற்கப்படுகிறது
- சவுதி அரேபியாவில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.45-65 வரை விற்கப்படுகிறது
- குவைத்தில் 1.5 லிட்டர் குடிநீர் ரூ.29-43 வரை விற்கப்படுகிறது
விலை உயரும் அபாயம்
நம்மூரில் பெட்ரோல் டீசலுக்கு மானியம் கொடுப்பதை போல, அந்த நாடுகளில் அரசு குடிநீருக்கு மானியம் கொடுக்கிறது. எனவேதான் விலை கொஞ்சம் கம்மியாக இருக்கிறது. ஆனால், ஈரான் தாக்குதல் நடத்தினால் இதன் விலை உடனடியாக 5-10 மடங்கு அதிகரித்துவிடும். அதாவது 1.5 லிட்டர் குடிநீர் ரூ.420 வரை விற்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications