புர்ஜ் கலீஃபாவை காணோம்.. டெல்லியாக மாறிய துபாய்! கடும் பனி மூட்டத்தால் மக்கள் அவதி
அபுதாபி: டெல்லியை போல அரபு நாடுகளிலும் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பனி மூட்டத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பாலைவன நாடு. இருப்பினும் இங்கு பனி மூட்டம் இயல்பான ஒன்றுதான். குறிப்பாக துபாயில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் தொடங்கி மார்ச் வரை பனிமூட்டம் இருக்கும்.

கடுமையான பனிமூட்டம்
அப்படித்தான் இந்த ஆண்டும் பனிமூட்டம் தொடங்கியிருக்கிறது. பனிமூட்டம் காரணமாக புர்ஜ் கலீஃபா போன்ற உயரமான கட்டிடங்கள் பனியில் மறைந்திருக்கின்றன. இது தொடர்பான வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, பனி குளிருக்கு புர்ஜ் கலீஃபா தூங்குகிறது என்று சிலர் கமெண்ட் செய்திருக்கின்றனர். இன்னும் சிலர், வடிவேலு டயலாக் போல, "எங்கடா இங்கிருந்த புர்ஜ் கலீஃபாவை காணோம்" என்றும் கமென்ட் செய்திருக்கின்றனர். இந்தியர்கள் டெல்லியுடன் இந்த பனி மூட்டத்தை ஒப்பிட்டு, துபாய் இன்று டெல்லி ஆகிவிட்டது என்று கூறியிருக்கின்றனர்.
ரெட் அலர்ட்
நேற்றைய தினம் அதிக அளவு பனி மூட்டம் இருந்ததாக ஐக்கிய அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பனிமூட்டம் குறித்து ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டம் காரணமாக ஓட்டுநர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து துபாய் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், "துபாயின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டத்தால், குறைந்த பார்வைத் திறன் சூழல் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும்" என அறிவுறுத்தியிருக்கிறது.
ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
அதேபோல அபுதாபி காவல்துறை தனது x பக்கத்தில், "பனிமூட்டத்தின் போது குறைந்த பார்வைத் திறன் ஏற்படும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அபுதாபி காவல்துறை கேட்டுக்கொள்கிறது. மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பாதுகாப்பாக ஓட்டுங்கள்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஜாயித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் குத்ரா போன்ற முக்கிய பகுதிகள் பனிமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர் கடும் இடையூறுகளை சந்தித்திருக்கின்றனர்.
பாலைவன தேசமும், பனிமூட்டமும்
பாலைவனம் வெயில் நிறைந்த பகுதி என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாலைவனங்களில் எந்த அளவுக்கு வெயில் இருக்கிறதோ அதே அளவுக்கு குளிரும் இருக்கும். துபாய் பாரசீக வளைகுடாவை ஒட்டி அமைந்திருக்கிறது. எனவே பகல் நேரங்களில் கடலிலிருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று நிலப்பரப்புக்குள் நுழைகிறது. இரவு தொடங்கியவுடன் நிலப்பரப்பு வேகமாக குளிர்கிறது. இதனால் காற்றில் உள்ள ஈரப்பதம் பனியாக மாறிவிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் தொடங்கி மார்ச் வரையில் இப்படி நடப்பது இயல்பானதுதான். குறிப்பாக டிசம்பர் முதல் ஜனவரி வரை பனி மூட்டம் அதிகமாக இருக்கும். எவ்வளவுதான் பனி இருந்தாலும் காலை 10 மணிக்கெல்லாம் சூரிய வெப்பத்தால் பனி முழுவதுமாக விலகிவிடும்.
பாலைவன நாடுகளில் பனி மூட்ட இயல்பானது என்றாலும் கூட, சமீப காலமாக வானிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு துபாயில் பெய்த கனமழை இதற்கு முன்னர் நடந்திராத ஒன்று. துபாயில் கனமழைக்கு வாய்ப்பே கிடையாது. ஆனால் எதிர்பாராத விதமாக மழை கொட்டி தீர்த்ததால், நகரம் வெள்ளத்தில் சிக்கியது. உலகின் வெப்பநிலை அதிகரிப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications