ஆருத்ரா இயக்குநர் துபாய் போலீசாரால் கைது.. இன்டர்போல் உதவியுடன் ராஜசேகரை தூக்கிய தமிழக போலீஸ்!
துபாய்: ஆருத்ரா மோசடி வழக்கில், துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை அடிப்படையில் துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் கோடி கோடியாக பணம் பெற்றுவிட்டு கம்பி நீட்டியது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.

ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், மகாலட்சுமி, மைக்கேல் ராஜ், நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆகியோர் துபாயில் தலைமறைவாகி இருப்பதால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கினர்.
மேலும், இண்டர்போல் உதவியுடன் துபாய் போலீசாரிடம் பேசி, ஆருத்ரா நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டோரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க தமிழநாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், அபுதாபியில் தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் அதன் இயக்குநர்கள் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்த நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், இண்டர்போல் உதவியுடன் அபுதாபியில் வைத்து ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications