புர்ஜ் கலீபாவை மிஞ்சும் பிரம்மாண்டம்.. துபாயில் வரும் மெகா கட்டிடம்! மிரள வைக்கும் ஐக்கிய அமீரகம்
துபாய்: உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலீபா துபாயில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே புர்ஜ் கலீபாவை மிஞ்சும் வகையில் ஒரு பிரம்மாண்ட கட்டிடம் துபாயில் அமையவுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சர் டிம் கிளார்க் தெரிவித்துள்ளார். மேலும், துபாயின் வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் அவர் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
வானுயர்ந்த கட்டிடத்திற்கு எப்போதும் மக்களிடையே ஆர்வம் அதிகமாக இருக்கும் இப்போது உலகின் மிகப் பெரிய கட்டிடமாக புர்ஜ் கலீஃபா இருக்கிறது. இதன் 830 அடியாக உள்ளது. இதற்கிடையே புர்ஜ் கலீஃபாவை விட பிரம்மாண்டமான திட்டங்கள் துபாயில் வரவுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சர் டிம் கிளார்க் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புர்ஜ் கலீபாவை விட பெரியது
இது தொடர்பாக அவர் கூறுகையில், "புர்ஜ் கலீஃபாவை விட பெரியதும், அழகானதும் துபாயில் வரலாம்" என்றார். அது என்ன மாதிரியான திட்டம் என்ற கேள்விக்கு அவர் வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை. இப்போது அது என்னவென்று தெரியாது என்று மட்டும் சொல்லிவிட்டார்.
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் துபாயின் வளர்ச்சியில் கிளார்க் முக்கிய பங்கு வகிக்கிறார்.. அப்போது துபாய் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மட்டும் ஒரு மையமாக இருந்தது. ஆனால், இப்போது அது சர்வதேச மையமாக உருமாறியுள்ளது. இப்போது உலகில் கச்சா எண்ணெய் தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் துபாய் பொருளாதாரம் அதை மட்டும் நம்பியிருக்கக்கூடாது என்பதால் பல்வேறு பொருளாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் துபாய் இறங்கியுள்ளது.
பிரம்மாண்டம்
ஊடகம், தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மற்றும் வங்கி போன்ற பல்வேறு துறைகளில் துபாய் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக கிளார்க் மேலும் கூறுகையில், "இதுபோன்ற பிரம்மாண்ட திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது வெறுமன அடையாளத்திற்காக மட்டும் இருக்கக்கூடாது. அரசுக்குச் செல்வத்தை உருவாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசுக்கு மட்டுமின்றி துபாயின் அனைத்து குடிமக்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்க வேண்டும்
ஊக்க மருந்து போல
1990களின் முற்பகுதியில் துபாய் படுவேகமாக வளர்ச்சி அடைந்தது. ஏதோ ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட வீரரைப் போலத் துபாய் வளர்ச்சி இருந்தது. அதேநேரம் இப்போது பல விஷயங்கள் மாறிவிட்டது.. துபாயின் எதிர்கால வெற்றி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. துபாய் ஆட்சியாளரின் தொலைநோக்குப் பார்வை, நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்தது. துபாயின் வளர்ச்சி இங்குள்ள குடிமக்களைச் சென்றடைவதை ஆட்சியாளர்கள் உறுதி செய்தனர்.
ஆட்சியாளர் அவர்கள் பணத்தை இந்த நகரத்தில் முதலீடு செய்து அதை வைத்து நகரத்தை மேம்படுத்தினர். இதுவே துபாயின் வேகமான வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தது. மேலும், துபாயின் இந்த வளர்ச்சி தற்செயலானதல்ல.. நகரத்தின் டிஎன்ஏவின் ஒரு பகுதியாகவே அது இருக்கிறது.. அந்தளவுக்குத் திட்டமிட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி முறையாக வழிநடத்தப்பட்டது. இதன் காரணமாகவே அது கையைவிட்டுப் போய் பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் இல்லை" என்றார்.
கச்சா எண்ணெய்யைத் தவிர்த்துவிட்டு துபாய் தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த முயலும் நிலையில், இவரது கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications