துபாயில் துரை வைகோ! மாமனிதர் வைகோ'' ஆவணப்படம் திரையிடல்! அமீரக மதிமுக அழைப்பு!
துபாய்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் இன்று மாலை துபாயில் திரையிடப்படவுள்ளதால் அதில் சிறப்பு விருந்தினராக துரை வைகோ பங்கேற்கிறார்.
இதற்காக மதிமுக பொதுக்குழு முடிந்த அடுத்த நாளே கத்தார் புறப்பட்டுச் சென்ற துரை வைகோ, அங்கு வைகோ ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று துபாய் சென்றுவிட்டார். அங்குள்ள அமீரக மதிமுக, அமீரக திமுக, நிர்வாகிகளை சந்தித்து பேசும் துரை வைகோ, வைகோ ஆவணப்படம் திரையிடல் நிகழ்விலும் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக அமீரக ம.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
''ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மாமனிதர் வைகோ'' என்ற ஆவணப்படம் துபாய் ஹெல்த்கேர் சிட்டியில் கிராண்ட் ஹயாத் வளாகத்தில் உள்ள வாக்ஸ் சினி பிளக்ஸ் திரையரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்குகிறார்.''
''இந்த ஆவணப்படத்தில் நியுட்ரினோ தடை, மூவர் தூக்குக்கு தடை, மதுவிலக்கு நடைப்பயணம், ஸ்டெர்லைட் தடை, மதுவிலக்கு போராட்டம், அணு உலை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வைகோவின் பங்களிப்பு பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.''
''இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மேலும் அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் ம.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
