துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மேஜிக் ஸ்பெல்".. இன் ஸ்விங் போட்டு கலங்கடித்த அப்ரிடி.. பக்கா பிளானோடு வந்த பாக்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

துபாய்: இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்று முறையான திட்டத்தோடு வந்து உள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு பாகிஸ்தான் களமிறங்கி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை டி 20 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளும் கடந்த இரண்டரை வருடங்களாக நேருக்கு நேர் ஆடவில்லை. இந்த நிலையில்தான் இன்று பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது.

6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி! 6 கப்பல்கள்...இலங்கையில் இந்திய கடற்படை வீரர்கள் 4 நாட்கள் பயிற்சி!

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் செய்ய முடிவு செய்தது. எதிர்பார்த்தபடியே இந்திய அணி கே. எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, சூர்ய குமார் யாதவ், பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சமி, பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் களமிறங்கினார்கள்.

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தானை இந்திய அணி இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்கொள்ளாத காரணத்தால் அவர்களின் பவுலிக் அட்டாக் எப்படி இருக்கும் என்றே இந்திய அணிக்கு பெரிதாக தெரியவில்லை. அதிலும் ஷாகீன் அப்ரிடி பவுலிங் அட்டாக் எப்படி இருக்கும் என்று இந்திய வீரர்கள் பலருக்கும் தெரியவில்லை. பொதுவாகவே பாகிஸ்தான் அணிக்கு ஷாகீன் அப்ரிடி சிறப்பாக பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்ய கூடியவர்.

 பவர் பிளே

பவர் பிளே

இதுவரை 60+ டி 20 ஆட்டங்களில் ஷாகீன் அப்ரிடி முதல் ஓவரிலேயே 21 போட்டிகளில் விக்கெட் எடுத்துள்ளார். ஆம்.. அந்த அளவிற்கு அதிரடியான பவுலிங் ரெக்கார்ட் வைத்து இருக்கிறார் ஷாகீன் அப்ரிடி. இதனால்தான் இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஷாகீன் அப்ரிடியை முறையாக எதிர்கொள்ள வேண்டும். அவரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் தெரிவித்து இருந்தனர்.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

இந்த நிலையில்தான் ஷாகீன் அப்ரிடி இன்றும் சிறப்பாக பவுலிங் செய்தார். முக்கியமாக பவர் பிளேவில் ஷார்ட் பந்துகள் வந்தாலே ரோஹித் சர்மா எளிதாக அடித்துவிடுவார். ஆனால் அவருக்கு உடலை நோக்கி இன் ஸ்விங் ஆகும் பட்சத்தில் பல முறை அவுட்டாகி இருக்கிறார். உடலை நோக்கி வரும் இன் ஸ்விங் பந்துகளை ரோஹித் பல முறை எதிர்கொள்ள முடியாமல் திணறி இருக்கிறார்.

திட்டத்தோடு வந்தனர்

திட்டத்தோடு வந்தனர்

சரியாக ரோஹித் சர்மா பேட்டிங் வந்ததும் வரிசையாக உடலை நோக்கி இன் ஸ்விங் பவுலிங் செய்து ஷாகீன் அப்ரிடி அழுத்தம் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே ஷாகீன் அப்ரிடியின் முதல் ஓவரிலேயே வந்த இன் ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யு ஆகி ரோஹித் டக் அவுட் ஆனார். அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மீண்டும் இதே போல ஷாகீன் அப்ரிடி இன் ஸ்விங் பந்துகளாக வீசினார்.

இன் ஸ்விங் அட்டாக்

இன் ஸ்விங் அட்டாக்

பெரிய அளவில் இன் ஸ்விங் ஆகாமல் லேசாக ஸ்விங் ஆகும் வகையில் மேஜிக் ஸ்பெல் வீசினார் ஷாகீன் அப்ரிடி.இவர் வீசிய 3 வது ஓவரில் மீண்டும் இன் ஸ்விங் பந்து காரணமாக கே. எல் ராகுல் போல்ட் ஆனார். இரண்டு ஓவரில் ஒவ்வொரு பந்துகளையும் ஷாகீன் அப்ரிடி திட்டமிட்டு வீசினார்.

அவுட்

அவுட்

இன்னொரு பக்கம் கோலி இறங்கியதும் இடது கை ஆர்தடாக்ஸ் பவுலர் இமாத் வாசிமை பாபர் அசாம் களமிறங்கினார். இமாத் வாசிம் வந்ததும் கோலி ஒரு பக்கம் திணறிப்போனார். பொதுவாக இடது கை ஆர்தடாக்ஸ் பவுலர்களிடம் கோலி திணறுவார். இதை அறிந்துகொண்டு பக்கா பிளானிங்கோடு இடது கை ஆர்தடாக்ஸ் பவுலரை கோலிக்கு எதிராக பாகிஸ்தான் களமிறக்கியது.

 சிறப்பான பிளானிங்

சிறப்பான பிளானிங்

அவரும் கடுமையாக திணறிய நிலையில், இன்னொரு பக்கம் பாஸ்ட் பவுலர்கள் ஓவர்களில் மட்டும் கோலி கொஞ்சம் அடித்து ஆடினார். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் யாரை ஓவரை போட வைக்க வேண்டும். யாருக்கு எப்படி ஸ்பெல் போட வேண்டும் என்று திட்டத்தோடு பாகிஸ்தான் இன்று களமிறங்கியது. இதனால் பவர் பிளே முழுக்கவே பாகிஸ்தான்தான் ஆதிக்கம் செலுத்தியது.

English summary
India vs Pakistan match in the T20 world cup: Shaheen Afridi over shakes Men in Blue top order
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X