25 ஆண்டுகள்.. படாத பாடுபட்ட இந்திய தொழிலதிபருக்கு லாட்டரி ரூபத்தில் அடித்த ரூ.8 கோடி.. யோகம்!
துபாய்: லாட்டரியில் யாருக்கு எப்போது பரிசு அடிக்கும் என்பது தெரியாது. அந்த வகையில் துபாயில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக டிக்கெட் வாங்கி வந்த இந்தியாவை சேர்ந்த ராஜன் லால் என்பவருக்கு இதுவரை பரிசு அடிக்காமல் இருந்தாலும் தொடர்ந்து டிக்கெட் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் இந்திய மதிப்பில் ரூ.8 கோடி அவருக்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது.
துபாயில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருபவர் ராஜன் லால். இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபரான ராஜன் லால் (வயது 79) பாலிவுட் திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார்.

லாட்டரி வாங்கும் பழக்கம்
ராஜன் லால் துபாயில் செட்டில் ஆனதில் இருந்தே அவருக்கு அங்கு விற்பனை செய்யப்படும் வரியில்லா லாட்டரி டிக்கெட்டை வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. இதுவரை அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பரிசும் லாட்டரியில் கிடைக்கவில்லை. இருந்தாலும் என் ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறிவிடும் என நினைத்த ராஜன் லால் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்துள்ளார்.
25 ஆண்டுகளாக லாட்டரி வாங்கியிருக்கிறார்
25 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் ராஜன் லால், ஆசை நிறைவேறியது. அவருக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8 - 9 கோடி) பரிசாக அடித்துள்ளது. மெல்லினியம் மில்லினர் சீரிஸ் 535ல் ராஜன் லால் டிக்கெட் வாங்கிய நிலையில், 3099 என்ற எண்ணிற்கு பரிசு அடித்துள்ளது.
ஏற்கனவே புற்று நோய் பாதிகப்பட்டு குணம் அடைந்த ராஜன் லாலுக்கு மூன்று முறை ஹார்ட் அட்டாக்கும் வந்துள்ளது. அண்மையில்தான் தனது 79-வது பிறந்த நாளை கொண்டாடிய ராஜன் லால், 25 வருடங்களாக லாட்டரி வாங்கி பணம் எதுவும் அடிக்கா விட்டாலும் என்றாவது ஒருநாள் அதிர்ஷ்ட காற்று தட்டாமலா போய்விடும் என்ற எதிர்பார்ப்புடன் லாட்டரியை தொடர்ந்து வாங்கி வந்து இருக்கிறார்.
ரூ.8 கோடி பரிசு
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.. கனவு நிறைவேறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு ஒரே லாட்டரியில் ராஜன் லாலின் இத்தனை வருட ஏக்கத்தை போக்கியுள்ளது. ஆமாங்க.. ராஜன் லாலுக்கு லாட்டரியில் ரூ 8 கோடி பரிசாக அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
லாட்டரியி ஒரு வழியாக பரிசு அடித்தது பற்றி பேசிய ராஜன் லால் கூறியதாவது:- "ஆண்டுக்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்குவேன். கடந்த 25 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். ஆனால், பெரிதாக பரிசு கிடைத்தது இல்லை. சமீபத்தில் கூட எனது நண்பரிடம் இதைப்பறி ஜோக் ஆக கூறினேன்.
நம்பமுடியாத அளவுக்கு இருந்தது
பாலிவுட் திரையுலகில் உள்ள எனது நண்பர்களை சந்திக்க அண்மையில் மும்பைக்கு வந்தேன். அப்போது விமான நிலையத்தில் இந்த டிக்கெட்டை வாங்கினேன். சவுதி அரேபியாவில் நான் இருக்கும் போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பரிசு விழுந்ததாக கிடைத்த தகவலை கேட்ட அந்த தருணம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது" என்றார்.
மும்பையில் வசித்து வந்த ராஜன் லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு அச்சுறுத்தலும் இருந்துள்ளது. இதனால், 90 களின் இறுதியில் துபாய்க்கு குடி பெயர்ந்தார். அங்கு ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த ராஜன் லாலுக்கு எதிர்பாராத் திருப்பதாக இந்த பரிசுத்தொகை விழுந்துள்ளது. பரிசுத்தொகையை என்ன செய்வது என்று முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications