Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பணமழை" தான்.. கேரளாவை சேர்ந்தவருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் ரூ.8.5 கோடியை அள்ளினார்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: அதிர்ஷ்டம் பொதுவாக ஒருவருக்கு எப்போது எப்படி அடிக்கும் என்றே தெரியாது. அப்படித் தான் இங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஐக்கிய அமீரகத்தில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பெரும் கடன் சுமையில் இருந்த அவர் இப்போது ஒரே நாளில் ரூ.8.5 கோடிக்கு அதிபதி ஆகியிருக்கிறார்.

இந்தியாவில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அதிலும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் இருந்து பல லட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வருகிறார்கள். அப்படித் தான் ஐக்கிய அமீரகத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

Kerala middle east jackpot

கேரளாவைச் சேர்ந்தவருக்கு ஜாக்பாட்

52 வயதான அவருக்கு துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் டிராவில் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 8.5 கோடி) ஜாக்பாட் அடித்துள்ளது. நெருங்கியவர்களே துரோகம் செய்ததால் கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டாராம். கடனும் அதிகரித்து இருந்ததாம். இந்த நேரத்தில் அடித்த இந்த ஜாக்பாட் வாழ்க்கையே மாற்றி போடும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஐடி சப்போர்ட்டில் வேலை செய்யும் இவரது பெயர் வேணுகோபால் முல்லச்சேரி. இவர் ஐக்கிய அமீரக நகரங்களில் ஒன்றான அஜ்மானில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த லாட்டரியை வாங்கி வந்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் தனக்கு லாட்டரி அடிக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாங்கியுள்ளார். இது இப்போது தான் கை கொடுத்திருக்கிறது.

வாழ்க்கையின் புதிய அத்தியாயம்

இது தொடர்பாக அவர் அங்கு வெளியாகும் கலீஜ் டைம்ஸ் செய்தித்தாளில் பேசிய முல்லச்சேரி, "இந்த ஜாக்பாட்டை வென்றதன் மூலம் எனது தோள்களில் இருந்து மிகப் பெரிய சுமை கீழே இறங்கியுள்ளது. எனது வாழ்க்கையில் இப்போது ஒரு கடினமான இடத்தில் இருக்கிறேன். இந்த நேரத்தில் கிடைத்துள்ள ஜாக்பாட் புதிய நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இனி வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை நம்பிக்கையுடன் தொடங்குவேன்" என்றார்.

எப்படி வாங்கினார்?

இவர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்தார். குடும்பத்தினருடன் சில காலம் டைம் செலவிட்ட அவர், கடந்த ஏப்ரல் 23ம் தேதி மீண்டும் அமீரகம் திரும்பியுள்ளார். அப்போது தான் அவர் இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். 12+ ஆண்டுகளாக லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற முயன்ற அவருக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவின் 500வது வெற்றியாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

கடன் சிக்கல்

அவர் மேலும் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாகவே வாழ்க்கையில் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போனது. கடன்கள் அதிகரித்தது. நான் மிகவும் நம்பிய ஒருவரிடம் எனது சேமிப்பைக் கொடுத்திருந்தேன். ஆனால், அவர் துரோகம் செய்துவிட்டார். இதனால் எனது நிதிநிலை மோசமாகிவிட்டது. நான் சமீபத்தில் தான் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டினேன். அதிலும் கடன் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது எனது வாழ்க்கையே மாற்றிப்போட்டுவிட்டது.

அடுத்த பிளான் என்ன?

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதலில் இந்த ஜாக்பாட் தொகையை வைத்து நான் எனக்கு இருக்கும் கடன்களை எல்லாம் அடைக்கப் போகிறேன். பிறகு குழந்தைகள் குடும்பத்தினருடன் நன்றாக விடுமுறையைக் கொண்டாடப் போகிறேன். என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகத் திட்டமிடவில்லை. ஆனால், நல்லா ஒரு லாங் பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன். குடும்பத்துடன் டைம் செலவிட வேண்டும் என்பதே எனது தற்போதைய விருப்பம்.

அதன் பிறகு மீண்டும் ஐக்கிய அமீரகம் வருவேன். இங்கு ஒரு பிஸ்னஸ் தொடங்கலாம் என இருக்கிறேன். எனது குடும்பத்தினரையும் இங்குக் கூட்டி வரத் திட்டமிட்டுள்ளேன். ஐக்கிய அமீரகம் எனது இதயத்திற்கு நெருக்கமானது. வேறு எங்கும் வசிக்க எனக்கு விருப்பமில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+