துபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்
துபாய் பீச்சில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் தொடையை தடவிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அது தெரியாமல் நடந்தது என்று முதலில் சொன்ன நபர் பின்னர் தனது தவறை ஒத்துக்கொண்டார்.
துபாய்: உலகம் முழுவதுமே பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. துபாயில் கடற்கரையில் ஓய்வாக படுத்திருந்த பெண்ணின் முதுகு, தொடையைத் தடவியதாக ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை என்றும், பந்தை பிடிக்கப் போகும் போது தெரியாமல் நடந்து விட்டதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். பந்து உருண்டோடியபோது அதைப் பிடிப்பதற்காக போனபோது கை தொடை மற்றும் முதுகில் பட்டு விட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.
அந்த நபர் கைது செய்யப்பட்டு தங்கள் பாணியில் போலீசார் விசாரித்த பின்னர் நடந்த சம்பவம் தெரிந்தே நடந்ததுதான் என்று கூறி உண்மையை ஒத்துக்கொண்டார்.

துபாய் கடற்கரையில் விளையாட்டு
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அவர், கார்பெண்டராக துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவர் துபாய்
கடற்கரைக்கு வந்துள்ளார். தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். உம் சுகிம் பீச்சில் அவர் விளையாடியபோது தான் மேற்படி சம்பவம் நடந்துள்ளது

தடவிய நபர்
இந்த நபர் மீது 24 வயது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒரு போலீஸ் புகார் கொடுத்தார். அதில், தனது நண்பர்களுடன் நீச்சலுக்காக கடற்கரைக்கு வந்தபோது
இந்த நபர் தனது தொடை மற்றும் முதுகில் கை வைத்து தடவியதாக அவர் கூறியிருந்தார்.

துபாய் போலீசில் புகார்
நான் கோபமடைந்தேன். அவரது கையைத் தள்ளி விட்டேன். எனது நண்பர்களும் கோபமாக அந்த நபரிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது அவர் பதில் தரவில்லை. மாறாக சிரித்தார். இதையடுத்து நான் துபாய் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தேன். போலீஸார் வந்து கைது செய்தனர் என்று கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட நபர்
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சம்ம்பவம் உண்மைதான். தொடையைத் தடவியதாக பெண் கூறுகிறார். பந்து பிடிக்க போனபோது தெரியாமல் பட்டு விட்டதாக அந்த ஆண் கூறுகிறார். ஆனால் தீவிர விசாரணைக்குப் பிறகு தனது தவறை அந்த நபர் ஒத்துக் கொண்டார். அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டார். தற்போது அந்த நபர் மீது போலீஸார் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறதாம் இந்த வழக்கு.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications