நடுவானில் கெத்து.. மோடி விமானத்தை காக்க.. சுற்றி சுற்றி வந்த 15 சவுதி ராயல் விமானங்கள்! சிலிர்க்குதே
சென்னை: சவுதி அரேபியாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் அவருக்கு சவுதி அரசாங்கம் மிக சிறப்பான வரவேற்பை கொடுத்தது.
சவூதி அரேபியாவின் ராயல் ஏர் ஃபோர்ஸின் போர் விமானங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பு வழங்க மற்றும் மரியாதை செலுத்துவதற்காக அவரின் விமானத்தின் முன்னும், பின்னும் அணிவகுத்து சுற்றியபடி வந்தன. பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக கொடுக்கப்படும் பார்மேஷனில் விமானங்கள் அணி வகுத்து வந்தன.
சவுதி அரேபியாவின் வான்வெளிக்குள் நுழைந்தபோது மோடியின் விமானத்திற்கு உடனடியாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. ராயல் பாதுகாப்பு இந்தியாவிற்கு ஒரு பக்கம் பெருமை. அதேபோல் பிரதமர் மோடியை பாதுகாக்க வேண்டிய கடமை சவுதிக்கு உள்ளது. அருகில் உள்ள வேறு சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளை இந்தியா எடுத்துள்ளது.
அங்கே பல நாடுகளில் சிறிய, பெரிய அளவிலான போர்கள் நடந்து வருகின்றன. போராளி அமைப்புகள், தீவிரவாத அமைப்புகள் கூட அந்த பகுதிகளில் உள்ளன. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பிரதமர் மோடியை பாதுகாக்கும் விதமாக 15 ராயல் விமானங்கள் அணி வகுத்து வந்தன.

ராக்கெட் லாஞ்சர்கள் உடன், அதே சமயம் ராயல் வசதிகளுடன் இந்த விமானங்கள் வலம் வரக்கூடியவை. இந்த விமானங்கள் இந்திய நாட்டு பிரதமருக்கு சிறப்பு கான்வாய் அணிவகுப்பு தருவது இந்தியாவிற்குத்தான் பெருமை.
பிரதமர் மோடி சவுதி பயணம்
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். டெல்லியில் இருந்து ஜெட்டாவிற்கு புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் நீண்ட மற்றும் வரலாற்று உறவுகளை இந்தியா ஆழமாக மதிக்கிறது. சமீப ஆண்டுகளில் இருவரின் உறவு புதிய உச்சம் தொட்டுள்ளது. இரண்டு நாடுகள் மேலும் நெருக்கமாகி உள்ளன. இரண்டு நாட்டு உறவு ஆழத்தையும் வேகத்தையும் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து முடி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் சவுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார். தனது இரண்டு நாள் பயணத்திற்கு முன்னதாக அவர் புறப்படும் அறிக்கையில், இரு நாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உட்பட பல விஷயங்களில் நெருக்கமாகி உள்ளது. பரஸ்பர நன்மை மற்றும் கணிசமானபலன்களை மனதில் வைத்து இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின் போது, இரு நாடுகளும் குறைந்தது ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட உள்ளன. மேலும் சில ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
#WATCH | In a special gesture, fighter planes from Saudi Arabia escort Prime Minister Narendra Modi's plane as it entered Saudi airspace to Jeddah. pic.twitter.com/Vhzxd6ir5p
— ANI (@ANI) April 22, 2025
இரு தரப்பும் விண்வெளி, ஆற்றல், சுகாதாரம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம், ஏஐ, கட்டுமானம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒப்பந்தங்களில் இரண்டு நாடுகளும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு, அதிலும் பாகிஸ்தான் உடனான உரசல், சர்வதேச அரசியல், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றியும் இதில் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் இந்தியாவில் வக்பு சட்ட திருத்தங்களுக்கு இடையே இந்த சந்திப்பு நடக்கிறது. நீண்ட காலத்திற்கு பின் சல்மான் - மோடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சந்திப்பு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications