மோடியின் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. அபுதாபியை நெருங்கியபோது அமீரகம் செய்த சம்பவம்
துபாய்: ஈரான் போருக்கு பிறகு முதல் முதலாக பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று சென்றார். மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைந்தவுடன் பிரதமர் மோடிக்கு எஃப் 16 ரக போர் விமானங்கள் சூழ்ந்து பாதுகாப்பு வழங்கிய வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து 'ஏர் இந்தியா ஒன்' எனும் தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று காலையில் புறப்பட்டார். முதல் நாடாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்குள்ள அபுதாபி விமான நிலையத்தில் அவரது விமானம் தரையிறங்கியது.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின அதிபர் ஷேக் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் பிரதமர் மோடியை வரவேற்றார்.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி பிரதமர் மோடியின் விமானம் பறந்து சென்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் எல்லையில் பிரதமர் மோடியின் 'ஏர் இந்தியா ஒன்' விமானம் நுழைந்தவுடன் அந்த நாடுகளின் போர் விமானங்கள் பாதுகாப்பு வழங்கி உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் எப்ஃப் 16 போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்தை சுற்றிலும் பறந்து பாதுகாப்புடன் அழைத்து சென்றன.
ஐக்கிய அரபு அமீரகத்திடம் 'டெசர்ட் ஃபால்கான்' எஃப்-16 பிளாக் 60 ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் தான் பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாதுகாப்பாக சென்றனர். அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சேர்ந்து ஈரான் மீது போர் புரிந்தன. அப்போது ஈரான் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்கியது. ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அப்போது இந்த 'டெசர்ட் ஃபால்கான் எப் 16 பிளாக் 60 ரக விமானங்கள் தான் ஈரானின் ட்ரோன், ஏவுகணை கணித்து அழித்தது.
UAE F-16 jets escort PM Modi’s plane in UAE airspace. #PMModi #UAE
— OSINT Spectator (@osintspectator) May 15, 2026
pic.twitter.com/UpTFkFnYaB https://t.co/nuAofE4sII
தற்போதும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பிரதமர் மோடியின் விமானத்துக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நெருங்கிய நட்பை அடையாளப்படுத்தும் வகையில் நடந்தது. அதன்பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்த இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி ஒத்துழைப்பு முக்கிய கவனம் பெற்றது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை என்பது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படுள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய மோடி பயணத்தின்போது சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் நம் நாடு ஒப்பந்தம் செய்தது. இதனால் விரைவில் சமையல் எரிவாயு பற்றாக்குறைக்கு தீர்வு வர உள்ளது. அதேபோல் இந்தியாவின் உள்கட்டமைப்புகளுக்கான 5 பில்லியன் டாலர் முதலீடு போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.













Click it and Unblock the Notifications