சவுதியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை தாக்கிய ஈரான்.. இந்த முறை சேதம் கொஞ்சம் அதிகம்!
துபாய்: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான, பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் சுமார் 10 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலை விட, இந்த தாக்குதல் கொஞ்சம் அதிரடியாகவே இருந்திருக்கிறது. மட்டுமல்லாது, போர் தொடங்கியதிலிருந்து இந்த விமானப்படைத் தளம் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சி.பி.எஸ். நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காயமும் உயிரிழப்பும்
காயமடைந்தவர்களில் இருவர் மிகக் கடுமையாகவும், 8 பேர் தீவிர காயங்களுடனும் இருப்பதாக அமெரிக்கப் படை தெரிவித்தது. அமெரிக்கா-ஈரான் மோதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படை வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் பணிக்குத் திரும்பிவிட்டனர். 13 பேர் உயிர் நீத்துள்ளனர்.
தரைப்படைகளை அனுப்பும் அமெரிக்கா
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரானுக்கு எதிரான போரில் தரைப்படைகள் இல்லாமல் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். ஆனால், மோதலுக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், மேற்கு ஆசியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
மார்கோ ரூபியோ சொன்னது என்ன?
ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களைத் தடுக்கும் வகையில் அதன் அனைத்து இராணுவத் திறன்களையும் அமெரிக்கா அழிக்கும் என்றார். "கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணை ஏவுதளங்களைப் பெரிய அளவில் அழிப்போம், இதனால் அவர்கள் அணு ஆயுதத்தைப் பெற முடியாது. இலக்குகளை அடைந்து வருகிறோம். காலக்கெடுவை விட முன்னதாகவே செல்கிறோம், தரைப்படைகள் இல்லாமல் இதை அடைய முடியும்" என்று கூறியிருக்கிறர்.
போர் எப்போது முடியும்?
இப்போர் மாதக்கணக்கில் நீடிப்பதற்குப் பதிலாக சில வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றும் ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார். ரூபியோவின் இக்கூற்று, மேற்கு ஆசியாவில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களை அமெரிக்கா பணியமர்த்தும் என்ற செய்திகளுக்குப் சில நாட்களுக்குப் பின்னரே வந்தது.
அமெரிக்காவின் வியூகம்
சிஎன்என், இரு ஆதாரங்களை மேற்கோள்காட்டி, அமெரிக்க இராணுவத்தின் 82வது ஏர்போர்ன் பிரிவின் துருப்புகள் விரைவில் அங்கு அனுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டது. 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்', அமெரிக்கப் போர் மந்திரிசபை அதிகாரியை மேற்கோள்காட்டி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், 82வது ஏர்போர்ன் பிரிவு தவிர்த்து, காலாட்படை மற்றும் கவச வாகனங்கள் உட்பட 10,000 கூடுதல் தரைப்படைகளை மேற்கு ஆசியாவுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
கட்டம்கட்டப்பட்ட ஈரான்.. இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.. டிரம்ப் பதிவின் மெகா பின்னணி! -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications