கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் சவுதி அரேபியா.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பா?
துபாய்: உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவுதி உற்பத்தியை மேலும் குறைக்க திட்டமிட்டு இருக்கிறது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு கச்சா எண்ணெய்க்கு உண்டும். கச்சா எண்ணய் உற்பத்தி குறையும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். இதனால், எரிபொருள் தேவைக்காக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்து இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வு கூட பெரும் தாக்கத்தை எற்படுத்தும்.

எனவே, சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை முடிவு செய்வதில் கச்சா எண்ணெய் விலை இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் பொருத்தவரை உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக சவுதி உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 77 முதல் 78 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு: ஒருபக்கம் சர்வதேச சந்தையில் மந்தமான சூழல் நிலவி வரும் நிலையில், மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் உற்பத்தியை குறைப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இதனால் சவுதியும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து இருந்தது. அதாவது, கடந்த மாதம் ஒருநாளைக்கு 10 லட்சம் பேரல்கள் என்ற அளவுக்கு உற்பத்தியை குறைத்து இருந்த நிலையில், ஜூலை முதல் மேலும் 10 லட்சம் பேரல்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அடுத்த மாதம் முதல் சவுதியின் கச்சா எண்ணெய் உற்பத்தி 9 மில்லியன் பேரல் அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால், ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும். சவுதி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து இருப்பதால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கச்சா எண்னெய் விலை உயர்ந்துள்ளது.

இந்த சூழலில், சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்து இருப்பதால் ஜூலை மாதத்தில் சந்தை பற்றாக்குறை ஒரு நாளைக்கு 3 மில்லியன் பேரல்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. எனினும், ரஷ்யா , நைஜீரியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய வழக்கமான உற்பத்தி அளவை எட்டினால் மிகப்பெரிய தாக்கம் இருக்காது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயருமா?: இதற்கிடையே, தினசரி உற்பத்தியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3.22 மில்லியன் வரை உயர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது இந்தியாவிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

எனவே சர்வதேச சந்தை விலையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் இந்தியா, தற்போது ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. உலக அளவில் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் பட்டியலில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. தற்போது நாள் ஒன்றிற்கு 1.96 மில்லியன் பேரல்கள் கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தை விட 15 சதவிகிதம் அதிகமாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தது. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணய் வாங்கும் அளவை இந்தியா அதிகரித்து இருப்பதால் சவுதியின் முடிவு இந்தியாவை நேரடியாக பாதிக்காது என்றே தெரிகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது என்பதே சந்தை வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம்












Click it and Unblock the Notifications