துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுத்தது நியாயமில்லை.. அக்தர் ஆவேசம்

Google Oneindia Tamil News

துபாய்: 2021 டி20 உலகக் கோப்பை போட்டியின் தொடர் நாயகனாக பாபர் அசாம் தேர்வு செய்யப்படாதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    David Warner பற்றி Coach-கிட்ட பேசிய Aaron Finch நெகிழ்ச்சி சம்பவம் | Oneindia Tamil

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வங்கக்கடலில் காற்றழுத்தம் தீவிரம் - அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - 5 நாட்களுக்கு கனமழை வங்கக்கடலில் காற்றழுத்தம் தீவிரம் - அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - 5 நாட்களுக்கு கனமழை

    ஆனால், தொடரில், அதிக ரன்கள் எடுத்தது பாபர் ஆசம் என்பதால், சோயிப் அக்தர் இதுகுறித்து அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

    சோயிப் அக்தர்

    சோயிப் அக்தர்

    சோயிப் அக்தர், ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்த விருதை வழங்கியிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கியது நியாயமில்லை. இவ்வாறு சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    பாபர் அதிரடி

    பாபர் அதிரடி

    இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாம் சிறந்த ஃபார்மில் இருந்தார். அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கிற்காக பாபர் அசாம் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். அசாம் ஆறு போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பாபர். இந்த டி20 உலகக் கோப்பையில் அசாம் நான்கு அரைசதங்கள் அடித்தார்.

    டேவிட் வார்னர்

    டேவிட் வார்னர்

    தொடர் நாயகனாகத் தேர்வான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் நல்ல பார்மில் காணப்பட்டார். இந்த இடது கை பேட்ஸ்மேனான வார்னர், உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார். அவர் ஏழு போட்டிகளில் மூன்று அரை சதங்களின் உதவியுடன் 289 ரன்கள் எடுத்தார்.

    முதல் முறையாக கோப்பை

    முதல் முறையாக கோப்பை

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து 172 ரன்கள் எடுத்தது. ஜோஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய பவுலர்களில் சிறப்பாக செயல்பட்டார். நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா வெற்றி

    ஆஸ்திரேலியா வெற்றி

    இந்த இலக்கை ஆஸ்திரேலியா எளிதாக எட்டியது. மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்தார். அதே சமயம் டேவிட் வார்னரும் ஆரம்பம் முதலே நியூசி வீரர்கள் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 53 ரன்கள் எடுத்தார். 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ரோகித் சர்மா

    ரோகித் சர்மா

    2019 உலக கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதிப் போட்டியில் மோதின. சூப்பர் ஓவர் வரை போன போட்டியில் இங்கிலாந்து வென்று சாம்பியனானது. அந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த தொடரில் இந்தியாவின், ரோகித் சர்மா, மொத்தம், 648 ரன்கள் குவித்தார். ஆனால் தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு கொடுக்கப்பட்டது. அவர் எடுத்த ரன்கள் 578.

    English summary
    Former Pakistan fast bowler Shoaib Akhtar has expressed his displeasure over the non-selection of Babur Azam as the player of the T20 World Cup series. He says, Babar Azam is the correct player to get the award.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X