துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மென்டர் தோனி.. வளைத்து வளைத்து 'வாத்தி' கொடுத்த டிப்ஸ்.. ஆரம்பத்திலேயே அசத்திய டீம் இந்தியா

Google Oneindia Tamil News

துபாய்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

    முதல்வர் தலைமையில் CSK-க்கு பாராட்டு விழா - Srinivasan

    தோனி மென்டர் பதவியேற்ற பிறகு இந்திய அணி சந்தித்த இந்த முதல் போட்டியில், தோனியின் டிப்ஸ் அதிக அளவுக்கு எதிரொலித்ததை பார்க்க முடிந்தது.

    8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

    பிசிசிஐ முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மென்டர் என்ற பணியிடத்தை உருவாக்கி அதில் முன்னாள் கேப்டன் தோனியை நியமித்துள்ளது.

    இந்திய அணி வரலாறு

    இந்திய அணி வரலாறு

    இந்தியா முதன் முதலில் 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்றபோது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட கிடையாது. மேனேஜர்தான் இருந்தார். பிறகு அனைத்து அணிகளும் பயிற்சியாளர்கள் பதவிகளை உருவாக்கின. பிறகு, பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என தனித்தனி பயிற்சியாளர்களும் வந்தனர். முதல் முறையாக இப்போது மென்டர் என்ற பதவியும் உருவாகிவிட்டது. கிரிக்கெட் வளர வளர அதன் தேவைகளும் மாறுபடுவதால் புதிய பணிகள் ஏற்படுத்தப்படுவதாக சொல்கிறார்கள்.

    மென்டர் தோனி

    மென்டர் தோனி

    மென்டர் என்ற பதவி என்பது அண்ணன் போன்ற பதவி. அண்ணனிடம் தங்கள் பிரச்சினைகளை சொல்வதைப்போல அவரிடம் சொல்ல முடியும். கேப்டன் கோலி உட்பட தற்போதைய அணியின் அனைத்து வீரர்களும், தோனி அணியில் ஆடியபிறகு களம் கண்டவர்கள்தான். எனவே அவர்களை பற்றி தோனிக்கு நன்கு தெரியும்.

    டிப்ஸ் கொடுத்த தோனி

    டிப்ஸ் கொடுத்த தோனி

    நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது தோனி ரொம்ப பிஸியாக இருந்தார். தொடர்ந்து, வீரர்களிடம் ஆலோசித்தபடி இருந்ததை வீடியோக்களில் பார்க்க முடிந்தது. குறிப்பாக, இளம் வீரர்கள் தோனியிடம் தொடர்ந்து பேசியபடியே இருந்தனர். அவர்கள் போட்டியை பார்ப்பதை விட தோனியிடம்தான் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தனர். நின்றபடியே தோனி பல அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கியபடி இருந்தார்.

    தோனி தேர்வு ஏன்?

    தோனி தேர்வு ஏன்?

    இந்திய அணி கண்ட வெகு சில சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். வெற்றிக்கான சூத்திரம் அறிந்தவர். எனவே அவர் அணியோடு இருப்பது யானை பலத்தை கொடுத்துள்ளது. நேற்றைய போட்டியிலும் இப்படித்தான், இங்கிலாந்து அடித்த 188 ரன்களை ஒரு ஓவர் மிச்சம் இருந்தபோதே, அசால்ட்டாக அடித்து வென்றது இந்தியா. 3 விக்கெட்டுகளை மட்டுமே இந்திய அணி இழந்திருந்தது. இஷான் கிஷன் அவராகவே வெளியேறியதால் அதை விக்கெட் என கருத முடியாது. கோலியும், ராகுலும், சூர்ய குமார் யாதவும்தான் அவுட்டாகி வெளியேறிய 3 பேஸ்ட்மேன்கள். இஷான் 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெளு வெளு என வெளுத்து தள்ளிவிட்டார். எனவே பிற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என அவரை வெளியே அழைத்துக் கொண்டார் கேப்டன்.

    அட்டகாச துவக்கம்

    அட்டகாச துவக்கம்

    ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது ஒரு பாசிட்டிவ் மைண்ட் செட்டை வீரர்களுக்கு கொடுத்துள்ளது. கூடவே, வாத்தியார் தோனி இருப்பது இரட்டை பாசிட்டிவ் மைண்ட்செட்டாகும். இப்போதைய நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்ல அனைத்து தகுதிகளும் கொண்ட டீமாக உள்ளது. 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற ஏகப்பட்ட போட்டிகள் உள்ளன. தோனியின் கூல்.. விராட் கோலியின் கோபம்.. இரண்டும் கலந்து கட்டி எதிரணிகளை கலங்கடிக்கப் போகிறது என்னவோ நிச்சயம். அதற்கான ஒத்திகைதான் நேற்றைய போட்டி.

    English summary
    The Indian team won the practice match against England in the 20-over Cricket World Cup yesterday. In this first match that the Indian team faced after Dhoni becomes Mentor, we were able to see that Dhoni's tips were highly echoed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X