Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டப்பட்ட கைகள்? "மென்டர்" தோனி வந்ததும்.. டீமில் மிஸ்ஸாகும் முக்கிய விஷயம்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அணியின் மோசமான கேப்டன்சியும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    India படுதோல்விக்கு என்ன காரணம்? Virat Kohli வேதனை| IND Vs PAK | Oneindia Tamil

    இக்கட்டான நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி சரியாக முடிவு எடுக்க முடியாமல் திணறியதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை இந்தியாவை வீழ்த்தி பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

    நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது.

    நம்பிக்கை இல்லை

    நம்பிக்கை இல்லை

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்தியா நேற்று முழுக்கவே பெரிய அளவில் நம்பிக்கை இன்றி ஆடியது. உதாரணமாக நேற்று ஒப்பனர்கள் இரண்டு பேரும் அவுட் ஆனதும் இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் திணற தொடங்கிவிட்டனர். ஒரு பக்கம் கோலி கொஞ்சம் நிதானமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவ் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் பண்ட் அதிரடியான கேமியோ கொடுத்துவிட்டு அவுட் ஆனார்.

    ஆடவே முடியாது

    ஆடவே முடியாது

    நேற்று பிட்ச் பேட்டிங் செய்ய கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த அளவிற்கு ஆடவே முடியாத நிலையில் பிட்ச் இல்லை. அப்படி இருந்தும் கூட இந்திய அணி டெத் ஓவர்களில் மோசமாக திணறியது. டெத் ஓவர்களில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜாவும் சரியாக ஆடவில்லை. கோலியும் சரியாக ஆடவில்லை. கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவும் சரியாக பேட்டில் பந்தை மீட் செய்ய முடியாமல் திணறினார்.

    பவுலிங்

    பவுலிங்

    ஒரு பக்கம் பேட்டிங் சொதப்பினால் இன்னொரு பக்கம் பவுலிங் மிக மோசமாக இருந்தது. வருண் சரியாக பவுலிங் செய்யவில்லை. அவரின் முதல் இரண்டு ஓவரில் திணறிய பாகிஸ்தான், அடுத்த இரண்டு ஓவர்களை துவம்சம் செய்தது. இன்னொரு பக்கம் ஷமி , புவனேஷ்வர் குமார், பும்ரா மூன்று பேருமே சரியாக பவுலிங் செய்யவில்லை. நேற்று அணியின் பவுலிங் ரொட்டேஷனும் சரி, பீல்டிங்கும் செட்டப்பும் சரி மோசமாகவே இருந்தது. பாதி ஆட்டத்திலேயே இந்திய அணி நம்பிக்கையை இழந்தது.

     புல் ஷாட்

    புல் ஷாட்

    அதிலும் நேற்று பாபர் ஆசாம் அதிரடியாக புல் ஷார்ட்களை அடித்தார். ஆனால் அவருக்கு தொடர்ந்து இந்திய அணி பவுலர்கள் ஷார்ட் பந்துகளை போட்டு வந்தனர். அவர் ஷார்ட் பந்துகளில் சிக்ஸ் பறக்க விடுகிறார் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து ஷார்ட் பந்துகளை இந்திய அணி வீரர்கள் வீசியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்திய பவுலர்களுக்கு யார் இந்த மாதிரியான திட்டங்களை, ஆலோசனைகளை எல்லாம் சொல்கிறார் என்ற கேள்வி எழுந்தது.

    தனிப்பட்ட முடிவு

    தனிப்பட்ட முடிவு

    அணியில் கோலி மட்டுமே தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடாது என்றுதான் தோனி கொண்டு வரப்பட்டார். ரோஹித்திற்கும் முழு பவர் வழங்கப்பட்டது . அதன் படியே நேற்றைய ஆட்டத்தில் கோலி பெரிதாக தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாக தெரியவில்லை. பேட்டிங் செய்யும் போது பெவிலியனில் இருந்து இஷான் கிஷன் பேட்டை கொடுக்க வருவது போல வந்து அறிவுரை சொல்கிறார். அதேபோல் பவுலிங் செய்யும் போதும் கோலிக்கு அஸ்வின் வந்து அறிவுரை சொல்கிறார்.

    அஸ்வின்

    அஸ்வின்

    இரண்டும் கண்டிப்பாக உள்ளே பெவிலியனில் இருந்து வந்த அறிவுரையாகவே இருக்கும். இதனால் கோலியின் முடிவு எடுக்கும் அதிகாரம், சுதந்திரமாக செயல்படும் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. too many cooks spoil the broth என்று சொல்வது போல அணியின் மென்டர் , பயிற்சியாளர், துணை கேப்டன், மூத்த வீரர்கள் என்று பலரின் அறிவுரையால் ஆட்டத்தில் கோலி சரியாக முடிவு எடுக்க முடியாமல் கைகள் கட்டப்பட்டு உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    தோனி

    தோனி

    முக்கியமாக தோனி வந்த பின் கோலியின் தனிப்பட்ட ஆக்ரோஷம் மொத்தமாக குறைந்துவிட்டது. கோலியின் பலமே அவரின் ஆக்ரோஷம்தான். கோலி கொஞ்சம் ஆக்ரோஷப்பட்டால் அடுத்த ஓவரில் சிக்ஸ் பறக்கும். ஆனால் நேற்று கோலியோ ஒரு ஜென் துறவி போல செயல்பட்டார். தோனி வந்த பின் அணியில் மிஸ்ஸாகும் முக்கியமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

    ஆக்ரோஷம் கோலி

    ஆக்ரோஷம் கோலி

    அணியில் கேப்டன் மட்டும் முடிவு எடுக்காமல்.. பலர் தொடர்ந்து அறிவுரை சொல்வதால் திட்டங்களை வகுப்பதில் சிக்கல் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று போட்டியை பார்த்த பலருக்கு இது தெரிந்து இருக்கும். கோலியை கொஞ்சம் தன்னிச்சையாக செயல்பட விட்டு இருந்தால் அவர் இன்னும் சிறப்பாக வியூகம் வகுத்து இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வருகின்ற போட்டிகளில்தான் இந்திய அணியில் உண்மையில் என்ன பிரச்சனை என்பது தெரிய வரும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+