இந்திய அணிக்குள் 2 கேம்ப்.. கோலிக்கு எதிராக திரண்ட வீரர்கள் படை.. திரி கிள்ளி போட்ட முன்னாள் வீரர்
துபாய்: இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார். அணிக்குள் முக்கியமான பிரச்சனை நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பி உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது.
மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கொஞ்சம் கூட போராடாமல் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பும் சிக்கலாகி உள்ளது.

கோலி
இந்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் கோலியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன. ஏற்கனவே கேப்டன் கோலி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த தொடரில் இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்திய அணி செமி பைனல் செல்லாத பட்சத்தில் இந்த 3 போட்டிகள்தான் டி 20 தொடரில் கோலி கேப்டனாக இருக்கும் கடைசி போட்டிகள் ஆகும்.

நியூசிலாந்து
இந்திய டி 20 கேப்டனாக தோல்வியோடு தொடரை முடிக்கும் சோகம் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து டி 20 தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் ஆட உள்ளது. இதில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள். ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் அணியில் ஆட வாய்ப்பு வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
Recommended Video

மோதல்
இந்த நிலையில் இந்திய அணிக்குள் வீரர்கள் இரண்டாக பிரிந்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கேப்டன் கோலியை ஆதரிப்பவர்கள், கோலிக்கு எதிராக இருப்பவர்கள் என்று இரண்டாக அணி பிரிந்து கிடப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் உலகக் கோப்பை பைனலுக்கு பின் கோலி மீது சில வீரர்கள் புகார் வைத்ததாக கூறப்பட்டது.

கேப்டன்சி
அதேபோல்தான் தற்போதும் கோலியின் கேப்டன்சி குறித்து வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இரண்டு கேம்ப் இருக்கிறது. ஒரு கேம்ப் கோலிக்கு எதிராக இருக்கிறது. கோலி எடுக்கும் முடிவுகளை ஒரு கேம்ப் எதிர்க்கிறது.

அக்தர்
இன்னொரு பக்கம் ஒரு கேம்ப் கோலிக்கு ஆதரவாக இருக்கிறது. இந்திய அணிக்குள் இரண்டு கேம்ப் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் எடுத்த சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பிரிவு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. அணியின் தோல்வியால் இந்த பிளவு ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

பிளவு
ஆனால் அவருக்கு எதிராக வீரர்கள் உள்ளது தெளிவாக தெரிகிறது. ஒரு கேப்டனாக அவருக்கு கீழ் ஆடும் வீரர்கள் கோலியை மதிக்க வேண்டும் என்பதே என் கருத்து என்று அக்தர் கூறியுள்ளார். இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அக்தர் தெரிவித்து இருக்கும் கருத்து இணையம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications