துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. ஐக்கிய அரபு அமீரகம் நிகழ்த்தும் சாதனை.. பின்னணியில் செம பிளான்!

Google Oneindia Tamil News

துபாய்: உலக நாடுகள் வாயில் விரல் வைக்கும் அளவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்தை நோக்கி ராக்கெட் ஒன்றை அனுப்ப உள்ளது. மங்கள்யான் -1 போலவே ஐக்கிய அரபு அமீரகமும் செவ்வாய் கிரகத்தை நோக்கி ஆர்பிட்டர் ஒன்றை அனுப்ப உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் உருவாக்கி இருக்கும் இந்த ஸ்பேஸ் மிஷனுக்கு ஹோப் (Hope) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அரபு நாடுகளில் இருந்து செயல்படுத்தப்படும் மிகப்பெரிய ஸ்பேஸ் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் அரபு நாட்டு திட்டமாகும் இது.

இந்த திட்டம் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆர்பிட்டர் ஒன்றை அனுப்ப உள்ளது. ஜப்பானில் இருக்கும் தனேகாஷிமா ஸ்பேஸ் செண்டரில் இருந்து இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.51 மணிக்கு இது விண்ணில் ஏவப்பட உள்ளது.

10வது, 12வது படித்தவர்களுக்கு இகாமர்ஸ் நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைகள்! 10வது, 12வது படித்தவர்களுக்கு இகாமர்ஸ் நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் வேலைகள்!

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்திற்கு தற்போது மூன்று முக்கியமான நாடுகள் தங்களது ராக்கெட்டை அனுப்ப உள்ளது. அமெரிக்காவின் மார்ஸ் 2020 திட்டம், சீனாவின் தியான்வென் 1 திட்டம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் திட்டம் ஆகிய மூன்று திட்டங்கள் ஆகும். செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதை பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டங்களை மூன்று நாடுகளும் செயல்படுத்த உள்ளது . இந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து மிக அருகில் 55 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.

தரையில் இறங்காது

தரையில் இறங்காது

ஆனால் இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் (Hope) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காது. மாறாக இந்த ஹோப் (Hope) செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும். மங்கள்யான் திட்டம் 1 போல இது செவ்வாய் கிரக்கத்தை சுற்றி வரும். அரபி மொழியில் இந்த திட்டத்திற்கு அல் - அமல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதன் அர்த்தம் ஹோப் (Hope) என்பதாகும். இந்த ஹோப் (Hope) 2021 பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்று சேரும்.

எத்தனை நாட்கள் சுற்றும்

எத்தனை நாட்கள் சுற்றும்

இந்த ஹோப் (Hope) மொத்தம் செவ்வாய் கிரகத்தை அடைந்த பின் 687 நாட்கள் அதை சுற்றும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 7 நாடுகள் ஒன்றாக இணைந்ததன் 50ம் ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த ஹோப் (Hope) அனுப்பப்பட்டு இருக்கிறது. சீனாவின் H-IIA ராக்கெட் மூலம் இந்த ஹோப் (Hope) விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஹோப் (Hope) ஆர்பிட்டர் அமீரகத்தில் இருக்கும் Mohammed bin Rashid Space Centre மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரம் ஆகும்

ஒரு மணி நேரம் ஆகும்

இந்த ஹோப் (Hope) ராக்கெட் ஏவப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து அதில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின் நேரடியாக செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும். இதில் இருந்து திரஸ்டர் எஞ்சின்கள் இயக்கப்பட்டு இது செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்படும். இதில் இருக்கும் சோலார் பேனல்கள் மூலம் இதற்கான எஞ்சின் சக்தி அளிக்கப்படும்.

ஏன் அனுப்புகிறது

ஏன் அனுப்புகிறது

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் வானிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய்ச்சி செய்ய இந்த ஹோப் (Hope) விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. எதிர்காலத்தில் அங்கு கட்டுமானங்களை ஏற்படுத்த அமீரகம் முடிவு செய்துள்ளது. இதற்கு இந்த ஹோப் (Hope) நிகழ்த்தும் கண்டுபிடிப்புகள் வழிகாட்டியாக இருக்கும் என்கிறார்கள். அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் மீது இருக்கும் பார்வையை இது மொத்தமாக மாற்ற போகிறது என்றும் கூறுகிறார்கள்.

எப்படி இருக்கும் இது

எப்படி இருக்கும் இது

இது பின் வரும் அடிப்படை வடிவமைப்பை கொண்டு இருக்கும்.

வடிவம் - 2.37 மீட்டர் அகலம் மற்றும் 2.90 மீட்டர் நீளம்
எடை: 1350 கிலோகிராம்

சக்தி : 1800 வாட்ஸ் (சோலார்), என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The United Arab Emirates to Hope Orbiter to Mars from Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X