துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி நினைவேந்தல்.. வரவேற்ற அமீரக திமுகவினர்.. துபாயில் நெகிழ்ந்த அப்பாவு!

Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற்ற கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு கருணாநிதி தமிழுக்கும் கல்விக்கும் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தார்.

கடந்த 31.08.2022 புதன்கிழமை அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவேந்தல் மற்றும் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவிற்கு பாராட்டு விழா துபாய் தேரா பகுதியில் உள்ள கிரவுண் பிளாஸா ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெற்றது.

அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற விழாவை ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய, துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Chairman - Essa Al Ghurair Investments and The Chairman of Dubai Awqaf Endowment funds, Government of Dubai )தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு அவர்களுக்கு நன்றியையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.இந்திய அரபுகளுக்கான உறவு பாலமாக திமுக ஆட்சி அமைய வேண்டுமென கேட்டுகொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய மேதகு ஜமால் சைஃப் அல் ஜர்வான் (General secretary of UAE investor council) ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, தமிழ்நாட்டிற்கான முதலீட்டை அதிகப்படுத்தவேண்டுமென கேட்டு கொண்டார்.. அதற்கான முயற்சி மேற்கொண்டு கடந்த மார்ச் மாதம் துபாய் வருகை புரிந்த தமிழ் நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொண்டார். அதேபோல அபுதாபி இந்தியன் அசோசியன் தலைவர்கள் நடராஜன், அல் அய்ன் இந்தியன் சோசியல் சென்டர் தலைவர் முபாரக் ஆகியோர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஏற்புரை வழங்கி தமிழக சட்ட பேரவை தலைவர் மு. அப்பாவு உரையாற்றினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய உரை அங்கு வந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.. குறிப்பாக பெரியார்,அண்ணா, கலைஞர் அவர்களில் ஆட்சி பொறுப்பேற்று திராவிட பாரம்பரியத்தை கட்டிகாத்து அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக உழைத்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி மிகவும் பெருமையோடு குறிப்பிட்டார்.

தமிழ்நாடு-அமீரக உறவு பற்றியும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமீரக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு உழைப்பை கொடுக்கின்றனர் போன்ற விவரங்களை வெகுவாக குறிப்பிட்டார்.. அதே போன்றதொரு கட்டமைப்பை நமது நாட்டிலும் ஏற்படுத்த கடும் உழைப்பை போட வேண்டுமென குறிப்பிட்டதோடு, தொடக்க பள்ளி கல்விக்கு அடிதளமிட்ட காமராஜரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விவரித்தார். மேலும் கல்விதுறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட கருணாநிதியின் பங்களிப்பை என்றென்றும் மறந்துவிடக்கூடாது எனக்கேட்டு கொண்டார்.

அரசு துறையினரின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கணினி மயமாக்கி உலகெங்கிலும் வாழும் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள முயற்சித்து வரும் தமிழ்நாட்டு அரசின் நடவடிக்களை தெரியப்படுத்தினார். கனடா,மலேசியா,இலங்கை,சிங்கப்ப்பூர் உள்ளிட்ட நாடுகளின் ஆட்சி மொழியாக விளங்கி கொண்டிருக்கும் தமிழின் பெருமை பற்றியும், அதனை பழமை வாய்ந்த மொழி என்ற அந்தஸ்த்திற்க்கு வித்திட்ட தலைவர் கலைஞர் அவர்களை நினைவு கூர்ந்தார். பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு,கடைசியாக துபாய் வருவதற்கு ஏற்பாடு செய்து இது போன்ற பிரமாண்ட விழாவை அமைத்து கொடுத்த எஸ்.எஸ். மீரான் அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிலால் அலியார், செந்தில் பிரபு, ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் திமுக கட்சியினரும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிறைவாக பிளாக் துலிப் செந்தில் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது. விழா ஏற்பாட்டை ஜவேரியா, சரத்,முஸ்தஃபா,இர்ஷாத், ஏஜிஎம் பைரோஸ்கான், இளமுருகன்,வி.எம். பிரபு, இஞ்சினியர் பாலா, முஸ்தாக், சலீம்,தாரிக்,ஃபரீத், மூவேந்தன், பாண்டியன், பன்னீர்செல்வம், அன்பு உள்ளிட்ட அமீரக திமுகவினற் செய்திருந்தனர்.

கோபேக் ராகுல்.. குமரியில் இந்துக்கள் சிறுபான்மை! கிறிஸ்தவ மிஷனரி நிதி -அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு கோபேக் ராகுல்.. குமரியில் இந்துக்கள் சிறுபான்மை! கிறிஸ்தவ மிஷனரி நிதி -அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு

அப்பாவு பேச்சு

அப்பாவு பேச்சு

இந்த விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளை விவரித்தார். தமிழ்நாடு - அமீரக உறவு பற்றி பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அமீரக ஆட்சியாளர்கள் கடும் உழைப்பை கொடுப்பதாக பாராட்டினார். இதே போன்ற கட்டமைப்பை இந்தியாவிலும் ஏற்படுத்த கடும் உழைப்பை தர வேண்டுமென அப்பாவு கேட்டுக்கொண்டார்.

காமராஜர், கருணாநிதி

காமராஜர், கருணாநிதி

தொடக்க பள்ளி கல்விக்கு அடிதளமிட்ட காமராஜர் அவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விவரித்தார். மேலும் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட கருணாநிதியின் பங்களிப்பை என்றென்றும் மறந்துவிடக்கூடாது எனக்கேட்டு கொண்டார்.

தமிழின் பெருமை

தமிழின் பெருமை

அரசு துறையினரின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கணினி மயமாக்கி உலகெங்கிலும் வாழும் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள முயற்சித்து வருவதாக கூறினார். கனடா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் ஆட்சி மொழியாக விளங்கி கொண்டிருக்கும் தமிழின் பெருமை பற்றியும், அதனை பழமை வாய்ந்த மொழி என்ற உயர்வுக்கு வித்திட்ட தலைவர் கருணாநிதியை அப்பாவு நினைவு கூர்ந்தார்.

நன்றி தெரிவித்த அப்பாவு

நன்றி தெரிவித்த அப்பாவு

பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு, கடைசியாக துபாய் வருவதற்கு ஏற்பாடு செய்து இது போன்ற பிரமாண்ட விழாவை அமைத்து கொடுத்தததற்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமீரக திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் துபாய் வாழ் தமிழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

English summary
TN Assembly speaker Appavu in Dubai - DMK cadres gave warm welcome
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X