ஸ்டாலினுக்கு துபாயில் பாராட்டு விழா! கொண்டாடித் தீர்த்த அமீரக திமுக!நெகிழ்ந்து போன கலாநிதி வீராசாமி
துபாய்: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகியுள்ள நிலையில் துபாயில் அமீரக திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக திமுக பொறுப்பாளர் மீரான் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டார்.
அயலக மண்ணில் தாம் பங்கு கொள்ளும் முதல் நிகழ்ச்சியே முதலமைச்சருக்கு நடக்கும் பாராட்டு விழா தான் எனப் பேசி கலாநிதி நெகிழ்ந்து போனார்.

துபாயில் பாராட்டு விழா
திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2 நாட்கள் முன்னர் துபாயில் பாரட்டு விழா நடைபெற்றுள்ளது. லேன்ட்மார்க் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் துபாயில் வாழும் தமிழர்கள் மற்றும் திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.

கலாநிதி வீராசாமி
இதனிடையே விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி MP, அயலக மண்ணில் தாம் பங்கு கொள்ளும் முதல் நிகழ்ச்சியே முதலமைச்சருக்கு நடக்கும் பாராட்டு விழா தான் என்றும் இதனை நினைக்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைவதாகவும் சிலாகித்தார். இது போன்ற ஒரு நிகழ்விற்கு தன்னை அழைத்த அமீரக திமுக பொறுப்பாளர் மீரானு நெஞ்சார்ந்த நன்றியை கூறுவதாக பேசினார்.

அரசின் திட்டங்கள்
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு உயரும் என்று தெரிவித்தார். இது போன்ற பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டியும்,அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

யார் யார் பங்கேற்பு
நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த செழியன்,அபுதாபி இந்தியன் சோசியல் அசோசியன் தலைவர் நடராஜன்,முனைவர் முஹையதீன், எழுத்தாளர் குழுமம் ஆசிஃப் மீரான்,காயிதே மில்லத் பேரவை பொது செயலாளர் ஹமீது ரஹ்மான்,ஜெசிலா பானு,விசிக செயலர் அசோகன்,ரெங்கராஜ், பாலாஜி பாஸ்கரன்,பால் பிரபாகர்,திமுகழக உறுப்பினர்கள் பிளாக் துலிப் செந்தில்,பிலால் அலியார்,செந்தில் பிரபு,ஏஜிஎம் பைரோஸ் கான்,வி.எம்பிரபு,இஞ்சினியர் பாலா மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications