ரொம்ப முக்கியம்.. அமீரக இந்தியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை.. முக்கிய அறிவிப்பு
துபாய்: ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக அதிகளவில் இந்தியர்கள் அமீரகத்திற்குச் செல்கிறார்கள். ஆண்டு கணக்கில் அங்கு வேலை செய்துவிட்டு, கணமாகச் சம்பாதித்த பிறகே அவர்கள் நாடு திரும்புவார்கள். இதற்கிடையே அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உத்தரவை அமீரகம் பிறப்பித்துள்ளது.
அமீரகத்திற்கு வேலைக்காகச் செல்லும் வெளிநாட்டினர்களில் சிலர் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் சில நேரம் தங்கி வருகிறார்கள். இதைத் தடுக்க அமீரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தனது நாட்டில் விசா காலாவதி அபராதங்கள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமீரகம்
இந்த புதிய குடியேற்ற விதிகளின் கீழ், அமீரகத்தில் விசா காலாவதிக்குப் பிறகு தங்குவோருக்கு, ஒரே மாதிரியான தினசரி அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது நேரடிச் சேவை மையங்கள் மூலம் இந்த அபராதங்களைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அமீரகத்தில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்குவோருக்கு ஒரு நாளைக்கு 50 திர்ஹம்ஸ் (சுமார் ரூ.1233) அபராதம் விதிக்கப்படுகிறது. முன்பு விசா வகைக்கு ஏற்ப அபராதங்கள் மாறிய நிலையில், இப்போது அனைத்து வகையான விசாக்களுக்கும் ஒரே அபராதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அபராதத் தொகையைக் கணக்கிடுவது இப்போது எளிதாகியுள்ளது.
சலுகை காலம்
முன்பு சுற்றுலா மற்றும் விசிட் விசாக்களுக்கு சலுகை காலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தச் சலுகை காலத்தை முழுமையாக நீக்குவதாக அமீரமக் அறிவித்துள்ளது. இதனால் விசா காலம் முடிந்த பிறகு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
அதேநேரம் குடியிருப்பு விசா கொண்டவர்களுக்கு, அவர்களின் விசா ரத்து செய்யப்பட்ட பிறகு 30 நாட்கள் சலுகை காலம் வழங்கப்படுகிறது. இந்தக் காலத்திற்குப் பிறகுதான் தினசரி 50 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். விசா காலாவதி அபராதங்களை இறுதி செய்யும் போது, நிர்வாக மற்றும் சேவைக் கட்டணங்கள் போன்ற கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது..
கடுமையான விளைவுகள்
விசா காலாவதியான பிறகு தங்கினால் அபராதத்தைத் தாண்டிப் பல கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சில சமயம் அபராதங்கள் செலுத்தப்படும் வரை பயணிகளை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத வகையில், தடைகளும் (exit bans) விதிக்கப்படலாம். அபராதங்களை முறையாகச் செலுத்தவில்லை என்றால் மீண்டும் அமீரகம் செல்ல விண்ணப்பிக்கும் போது விசா கிடைக்காமல் போகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது..
மேலும், இந்த அபராதங்களைச் சரிபார்ப்பதற்கும், செலுத்துவதற்கும் பல்வேறு வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அமீரக பெடரல் ஆணையமான ICP (Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security) இணையதளம் மூலம் அபராதங்களை நேரடியாகச் செலுத்தலாம். துபாயில் வசிப்பவர்கள், குடியுரிமை மற்றும் வெளிநாட்டவர் விவகார இயக்குநரகத்தின் (GDRFA) தளத்தையும் பயன்படுத்தலாம். நேரில் செலுத்த விரும்புபவர்கள், அமீர் மையங்கள், பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் மையங்கள் அல்லது விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளில் உள்ள குடியேற்றக் கவுண்டர்களில் அபராதங்களைச் செலுத்தலாம்.
கவனிக்க வேண்டியவை
அமீரகத்தை விட்டு வெளியேறும் முன், அனைத்து அபராதங்களையும் செலுத்துவது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அபராதங்களைத் தவிர்க்க சில உதவிக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விசா காலாவதி தேதிகளைக் கவனமாகப் பதிவுசெய்து, அதற்கு முன்பே விசா நீட்டிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விசா புதுப்பித்தல் செயல்முறைகள் சரியான நேரத்தில் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications