இன்றே கடைசி: டி20 கேப்டன் பொறுப்பை உதறிய விராட் கோலி.. ரவி சாஸ்திரியும் அவுட்.. சாதித்தது என்ன?
துபாய்: இந்திய கிரிக்கெட்டின் ஒரு அத்தியாயம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. விராட் கோலி-ரவி சாஸ்திரியின் தலைமை சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு 20 ஓவர் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக கோலி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த வகையில், இன்று விராட் கோலிக்கு, டி20 கேப்டனாக இன்றைய நமீபியாவுக்கு எதிரான ஆட்டம்தான் கடைசி போட்டியாகும். ரவி சாஸ்திரியும் தலைமைப் பயிற்சியாளராக இன்றுதான் கடைசி போட்டியில் பொறுப்பு வகிக்கிறார். இனிமேல் ராகுல் டிராவிட்தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியாளர்-கேப்டன் ஜோடி உலக கோப்பை டி20 போட்டியில் நபிமியாவை தோற்கடிப்பதன் மூலம் தங்களுடைய பயணத்தை மகிழ்ச்சியான தருணத்தில் முடிக்க விரும்புகிறது. அரையிறுதிக்கு செல்ல முடியாத ஏமாற்றத்தை இந்த வெற்றி போக்கும் என்று நம்பலாம்.

வெளிநாடுகளில் அபாரம்
ரவி சாஸ்திரி மற்றும் கோலி ஜோடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் சிறப்பாக ஆடி, அதுவரை இந்திய அணிக்கு ஹோம் அணி என்று சூட்டப்பட்டிருந்த பெயரை மாற்றியது உண்மை. இதுதான் இந்த ஜோடியின் முக்கியமான சாதனை. அதேநேரம், கேப்டனாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் கோலி அணி வெல்லவில்லை. திறமையிருந்தாலும் கூட இந்த அணி அந்த சாதனையை செய்ய முடியவில்லை. ஐபிஎல் தொடரில் கூட கோலி அணியான ஆர்சிபி இதுவரை கோப்பையை வென்றது கிடையாது.

ரவி சாஸ்திரி
ஓகே.. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணிக்காக அப்படி என்ன செய்தார்? ஒரு பார்வை: வர்ணனையாளராக இருந்து பயிற்சியாளராக மாறிய ரவி சாஸ்திரி, டீம் இந்தியாவுக்காக எந்த ஐசிசி கோப்பையையும் வென்றிருக்கவில்லை. ஆனால் அவரது சாதனை மோசமானது என்று சொல்ல முடியாது. சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் ஆஸ்திரேலியாவில் (2018-19) டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதன் பிறகு 2020-21ல் மற்றொரு தொடரை வென்றது. நியூசிலாந்தை 5-0 என்று டி20 தொடரில் தோற்கடித்த போது, இருதரப்பு தொடரில் 5 டி20 போட்டிகளையும் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. ரவி சாஸ்திரி பயிற்சியாளரான பிறகு இந்தியாவின் டெஸ்ட் போட்டிகள் வெற்றி 58.14 சதவீதம், ஒரு நாள் போட்டி வெற்றிகள் 68 சதவீதம், 20 ஓவர் போட்டிகளில் 70.97 சதவீதமாக இருந்தது.

7 டெஸ்ட் தொடர்கள்
இது தவிர, சொந்த மண்ணில் இந்தியா விளையாடிய ஏழு டெஸ்ட் தொடர்களையும் வென்றது. 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

கோலி கேப்டன்ஷி
கோலியின் கேப்டன்சி சாதனை எப்படி இருந்தது? விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை 49 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 29 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதே சமயம் 4 ஆட்டங்களில் முடிவு வரவில்லை. ஒரு கேப்டனாக, விராட் கோலி இந்தியாவுக்காக 1489 ரன்கள் விளாசினார். தோனிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான டி20 கேப்டன் விராட் கோலி ஆவார்.

விவாதங்கள்
விராட் கோலி கேப்டனாக டி20 போட்டிகளில், 30 இன்னிங்சில் 1000 ரன்களை எடுத்தார். சமீபத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் இந்த சாதனையை முறியடித்தார். அதுவரை கோலி சாதனைதான் நம்பர் 1ஆக இருந்தது. விராட்டின் அணித் தேர்வு, பிடிவாதம் மற்றும் களத்தில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால், புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொண்டால், இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த கேப்டன்களில் விராட் கோலி ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

ஐசிசி கோப்பையை வெல்லவில்லை
2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது கோலி அணி. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. டீம் இந்தியா பெரிய வாய்ப்புகளை தவறவிட்ட சில சந்தர்ப்பங்கள் இவையாகும். இந்திய அணி ராசியில்லாத அணியாக மாறிவிட்டது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளதற்கு காரணம் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் போனதுதான். தோனி இந்த விஷயத்தில் கில்லாடியாக இருந்தார். கோலிக்கு பிறகு கேப்டனாகப் போகும் ரோகித் சர்மா, தோனி பாணியில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியாவை மாற்றுவார், ஏனெனில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications