2007ல் நடந்த அதே சம்பவம்.. சோகமாக உட்கார்ந்த ரோஹித்.. கலங்கிய கோலி.. இந்திய அணி சறுக்கியது எப்படி?
துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் குழு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு செமி பைனல் செல்லும் வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.
முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. அதன்பின் ஒரு வாரம் கழித்து நேற்று நடந்த ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது.
நேற்று இந்திய அணியில் பும்ராவின் பவுலிங் தவிர எதுவும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி செமி பைனல் செல்லுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

செமி பைனல்
குழு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் செமி பைனல் செல்ல முடியும். இப்போது இருக்கும் நிலைமையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் 2 அணிகளுக்குத்தான் செமி பைனல் செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தியா செமி பைனல் செல்ல வேண்டும் என்றால் நியூசிலாந்து குறைந்தது ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும்.

ஆப்கானிஸ்தான்
அதேபோல் அதிக ரன் ரேட் வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். இதனால் இந்திய அணி செமி பைனல் செல்வது கிட்டத்தட்ட கனவாகிவிட்டது. இந்திய அணி மிக சிறப்பான வீரர்களை உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்தும் கூட மோசமான ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. 2007ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இதே போன்ற ஒரு தோல்வியைதான் சந்தித்தது.
Recommended Video

தோல்வி
2007ல் இந்திய அணி அடுத்தடுத்து இலங்கை, வங்கதேசம் அணிகளிடம் தோல்வி அடைந்து 50 ஓவர் உலகக் கோப்பையில் குழு ஆட்டத்திலேயே வீழ்ந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அது மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது.

மறக்க மாட்டார்கள்
80ஸ் கிட்ஸ்களும், 90ஸ் கிட்ஸ்களும் மறக்க முடியாத மிகப்பெரிய தோல்வியாக அந்த தோல்வி அமைந்தது. இந்தியாவில் இருந்த கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் அப்போது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. அவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அப்படி ஒரு மோசமான தோல்வியை இந்திய அணி பெற்று இருந்தது.

அதே போன்ற தோல்வி
2007ல் ஏற்பட்டது போன்ற ஒரு தோல்வி இந்திய அணிக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. குழு போட்டியில் வெளியேரும் சூழ்நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று பாதி ஆட்டத்திலேயே கோலி சோகமாக அமர்ந்து இருந்த காட்சிகளும், ரோஹித் தலையில் கைவைத்தபடி அமர்ந்து இருந்த காட்சிகளும் இந்திய ரசிகர்களின் இதயத்தை கனமாக்கியது. 2007 நினைவலை பலருக்கும் திரும்பியது. இந்திய அணியின் மொத்த பெவிலியனும் சோகமாக காட்சி அளித்தது.

சொதப்பல்
இந்திய அணி நல்ல வீரர்களை தேர்வு செய்து இருந்தாலும் கூட பலரின் பார்ம் அவுட் அணிக்கு எதிராக திரும்பியது. ரோஹித், கோலி முழு பார்மில் இல்லை. சூர்யா குமார் யாதவ், இஷானுக்கு சர்வதேச அனுபவம் அதிகம் இல்லை. வருண் ஐபிஎல்லில் மட்டுமே ஆடியவர். பண்ட் தேவையான நேரங்களில் பொறுமையாக ஆடுவது இல்லை. ஷமி பார்ம் அவுட் என்று இந்திய அணி மிக மோசமாக சொதப்பி உள்ளது. பல விஷயங்கள் இந்தியாவிற்கு எதிராக திரும்பியது.

நல்ல வீரர்கள்
எல்லோரும் நல்ல வீரர்கள்தான்.. ஆனால் யாரும் ரிதமில் இல்லை என்று சொல்லும் நிலைதான் இந்திய அணியில் நிலவி வருகிறது. ஜடேஜா நேற்று கொஞ்சம் சுமாராக பேட்டிங் செய்தார். பும்ரா மட்டுமே கொஞ்சம் நன்றாக பவுலிங் செய்தார். மற்றபடி யாருமே சரியாக ஆடாதது இந்திய அணியின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்தது. இந்திய அணி நல்ல வீரர்களை கொண்டு இருந்தாலும்.. அவர்கள் தற்போது மோசமான பார்மில் இருப்பது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications