குண்டு வெடிப்பில் இறந்த பவானி உடலை பார்த்து கதறிய பிள்ளைகள்!
பெங்களூரு: பெங்களூருவில் நேற்றிரவு நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த பவானி தேவி (38)யின் உடல் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனை நடந்த ஆஸ்பத்திரிக்கு வந்த பவானி தேவியின் கணவர் பாலன், 15 வயது மகன் மற்றும் 11 வயது மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நூற்றுக்கணக்கான உறவுக்காரர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் அந்த இடமே சோகமயமாக இருந்தது.

பவானிதேவி
நல்ல கணவர், ஆஸ்திக்கு ஒரு ஆண் பிள்ளை, ஆசைக்கு ஒரு பெண் பிள்ளை என்று போய்க் கொண்டிருந்தது பவானி தேவியின் வாழ்க்கை. ஆனால் தீவிரவாதிகளின் குரூர எண்ணத்திற்கு பலியாகி தனது கணவரையும், குழந்தைகளையும் குறைந்த வயதிலேயே இப்படி தவிக்க விட்டு போய்விடுவோம் என்று பவானி தேவி கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், விடுமுறைக்காக பெங்களூரு வந்தது மட்டுமின்றி, ரயில் டிக்கெட்டும் கன்பார்ம் ஆகாமல் பெங்களூரிலேயே ஞாயிற்றுக்கிழமை தங்கியதன் விளைவு அவரது விலைமதிப்பில்லாத உயிர் பறிபோயுள்ளது.

கலங்கும் மகன்
மருத்துவமனைக்கு வந்த பவானி தேவியின் மகன், தனது தாயின் உடலை பார்க்கும் மன தைரியமின்றி, உறவுக்காரர்களுக்கு பின்னால் அழுதபடி செல்கிறார்.

உடைந்துபோன மகள்
பவானி தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்வதை பார்த்து, போகாதேம்மா.. என் தாயே.. என்றபடி கதறியது அவரின் பெண் குழந்தை.

தடயத்திற்காக தேடுதல்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பெங்களூரு நகர சட்டம்-ஒழுங்கு, கூடுதல் போலீஸ் கமிஷனரும், இந்த வழக்கின் விசாரணை குழு தலைவருமான அலோக் குமார் தலைமையில் தடயவியல் ஆய்வு இன்று நடைபெற்றது.

மோப்ப நாய்
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications