திம்பம் கொண்டை ஊசி வளைவில் கஷ்டப்பட்டு ஏறிய வாகனங்கள்.. குறுக்கே 10 அடி நீள மலைப்பாம்பு- திக் வீடியோ
ஈரோடு: திம்பம் மலைப் பாதையை 10 அடி நீள மலைப்பாம்பு கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளை திடுக்கிட வைத்துள்ளது.
Recommended Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலத்தை இணைக்கும், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.

திகில் பாதை
இந்த மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு ரொம்பவே தலைவலி கொடுக்க கூடிய பாதையாகும். கொண்டை ஊசி வளைவுகள் ஆபத்தானவை என்பதோடு, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அவ்வப்போது இந்த ரூட்டை கடந்து செல்லும் என்பதும் திகிலுக்கு காரணம்.

மருந்து வாகனங்கள்
தற்போது முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் இரு மாநிலங்களுக்கிடையே அனுமதிக்கப்படுகிறது.

10 அடி பாம்பு
இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் சரக்கு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 அடி நீள மலைப்பாம்பு திம்பம் மலைப்பாதையை கடப்பதற்காக மெதுவாக ஊர்ந்து சென்றது. சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்லும்வரை காத்திருந்து பாம்புக்கு வழிவிட்டனர்.

5 நிமிடங்கள் கடந்தது
சுமார் ஐந்து நிமிடம் மலைப்பாம்பு சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்று வனப்பகுதிக்கு சென்று மறைந்தபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் பாம்பை பார்த்து நிறுத்துவிட்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications