மைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடி. வெகுண்டெழுந்த பெண்கள்.. சமரசத்திற்கு ஒப்புதல்
ஈரோடு: மைக்ரோ பைனான்ஸ் வசூல் நெருக்கடியை கண்டித்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை வெகுண்டெழுந்து பெண்கள் முற்றுகையிட்டதால்
சமரசத்திற்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியாக வருவாய் இழந்தனர். இதற்கிடையே தொழில் துவங்குதற்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் வார வாரம் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பால் கடந்த 3 மாதங்களாக கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் மைக்ரோ பைனாஸ் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்ற பெண்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூல் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.
தற்போது வாழ்வாரதாரமின்றி தவித்து வரும் வேளையில், குடும்பத்தினரை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவைச் பெண்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.

இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் ரிசர்வ் வங்கி உத்தரவுபடி 3 மாதங்களுக்கு கடன் தவனை வசூலிக்க கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிதிநிறுவன அலுவலர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து மகளிர் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications