தூக்க கலக்கம்.. எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 4 தொழிலாளர்கள் பலி.. ஈரோட்டில்!
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி
ஈரோடு: லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டதில் பஞ்சாலை ஊழியர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதியில் பஞ்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களான ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் நள்ளிரவு வேலை முடித்துவிட்டு காரில் கிளம்பி சென்றனர். காரை கோவிந்தராஜன் ஓட்டினார்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. தாறுமாறாக இங்குமங்கும் ஓடிய கார், எதிரே காபி கொட்டை ஏற்றி வந்துகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தங்கப்பாண்டியன், சங்கர், ஜெய்கணேஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால், வீரராகவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால்தான் விபத்து நடந்துள்ளதாக முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications