ஈரோட்டில் பயங்கரம்.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்.. கோவை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலையில் 2 கார்கள் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று நள்ளிரவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சென்ற 2 கார்கள் திடீரென்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

நெசவாளர் காலனியில் 2 கார்களுக்கு சாலையில் எதிரெதிராக வந்த நிலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 கார்களும் முழுவதுமாக சேதமடைந்தன.
இதில் ஒரு காரில் பயணித்த ஒரே குடும்பத்தை 4 பேரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த வியாபாரி முருகன், அவரது மனைவி ரஞ்சிதா (வயது 30), மகன் அபிஷேக், மகள் நித்திஷா ஆகியோர் விபத்தில் பலியாகினர்.
இதில் பலியான முருகன் - ரஞ்சிதா தம்பதியின் மகன் அபிஷேக்கிற்கு வயது 8. நித்திஷாவுக்கு வயது 7 தான் ஆகிறது. அதேவேளையில் இன்னொரு காரில் வந்த கல்லூரி மாணவர்களும் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியினர் உடனடியாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும், பொதுமக்களும் சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எப்படி நடந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications