77 + 1.. ஒவ்வொரு பூத்திலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலர் அறிவிப்பு!
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட 96 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் கூடுதல் வாக்கு இயந்திரங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட 96 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

களத்தில் 77 பேர்
இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 83 பேரின் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அமமுக வேட்பாளர் சிவபிரசாத் உள்பட 6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், தற்போது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தலுக்கான போட்டியில் உள்ளனர். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

எண்ணிக்கை அதிகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் கூடுதல் வாக்கு இயந்திரங்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 77 வேட்பாளர்கள் + நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட உள்ளன.

பணிகள் தீவிரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே 286 வாக்கு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி கிடங்கிற்கு 1,000 வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 21 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 8 விவிபேட் இயந்திரங்களும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு ஓரிரு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

5 வாக்கு இயந்திரங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒருபக்கம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளருக்காக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம், இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் 5 வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications