65 சவரன் தங்கம் கொள்ளை.. கடப்பாரையை கொண்டு உடைத்து.. தலைமை ஆசிரியர் வீட்டில் துணிகரம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 65 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இசபெல்லா ஜான்சிராணி. இவர் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் டேவிட் சூசை மாணிக்கம்.

 65 sovereign gold stolen from headmaster house in Gobichettipalayam

இந்நிலையில், இசபெல்லா ராணி தனது கணவர் மற்றும் மகள் பேபி வேலன்டினா ஆகியோருடன் கோவையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..

உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்து கோபி திரும்பிய போது, இசபெல்லா வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 65 சவரன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது,

 65 sovereign gold stolen from headmaster house in Gobichettipalayam

இது குறித்து தலைமையாசிரியர் இசபெல்லா ஜான்சி ராணி கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் அறிஞர்கள் வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.

கொள்ளையர்கள் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த யூபிஎஸ் இணைப்பைத் துண்டித்து, கடப்பாரையால் கதவை உடைத்து பின் உள்ளே சென்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+