ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி இடமாற்றம்
ஈரோடு: கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவ்வப்போது நிர்வாக காரணங்களுக்காக மண்டல வாரியாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். பொதுவாக இன்ஸ்பெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களுக்குள் தான் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு காவல் சரகம் தாண்டி இன்னொரு காவல் சரகத்திற்கு அபூர்வமாகவே இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் அப்படி இல்லை.. தமிழ்நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதுதான் நடைமுறையாகும். அந்த வகையில் கோவை சரகத்தில் 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவி ஈரோடு டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த குருசாமி நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த லயோலா இன்னசி மேரி ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பதி கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு சிறப்பு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பி.ஆர்.செந்தில்குமார் நீலகிரி மாவட்டம் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமிர்தலிங்கம் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஏ.செந்தில்குமார் ஈரோடு சிறப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
-
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications