உலகத்தைவிட்டு சந்தோஷமாக போகிறோம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்துங்கள்..தற்கொலை செய்த காதல் ஜோடி உருக்கம்
Recommended Video

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி வலக நேதாஜி வீதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் நந்தகுமார் (19). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் தொலைபேசி நிலையம் அருகே டீ கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கும்பகோணம் அருகே உள்ள சாரங்கபாணி புளியம்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் மகள் சத்யபிரியா (21).
நந்தகுமாரும் சத்யபிரியாவு்ம பேஸ்புக் மூலம் பழகினர். இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்கள் இருவரையும் உறவினர்கள் வீட்டுக்குள் சேர்த்து கொள்ளவில்லை.

கதவை தட்டியும் திறக்கவில்லை
பின்னர் வெள்ளகோவில் உப்புபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை என்பதால் டீக்கடை உரிமையாளர் அவரது வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்காததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார்.

விஷ மருந்து
அப்போது நந்தகுமார் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இதையடுத்து வெள்ளகோவில் போலீஸாருக்கு டீக்கடை உரிமையாளர் தகவல் கொடுத்தார். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சத்யபிரியா தரையில் சடலமாக கிடந்தார். அவரது பக்கத்தில் விஷ மருந்து இருந்தது தெரியவந்தது.

தற்கொலை கடிதம்
இதையடுத்து இருவரது சடலத்தையும் காங்கேயம் அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் காதல் தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம்.

ஆர்டிஓ விசாரணை
அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சந்தோஷமாக செல்கிறோம். அதனால் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் போதும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடத்தவுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications