"காதல் கார்த்தி".. திருமணத்திற்கு ஒருவர்.. ரொமான்ஸுக்கு வேறு ஒருவர்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே!
ஈரோட்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீசியுள்ளார்
ஈரோடு: காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் கார்த்தி(26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் கார்த்தியுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார். ஈரோடு மட்டுமல்லாது கோவை, ஊட்டி என பல இடங்களுக்கு இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கின்றனர்.
குடும்ப நெருக்கடியில் இருந்த இளம்பெண்ணுக்கு கார்த்தி ஆறுதலாக இருந்திருக்கிறார். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கார்த்தி திடீரென அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். தனக்கு ஏற்கெனவே திருமணமான தன்னை காதலிக்க வேண்டாம் என்று அப்பெண் கூற கார்த்தி கேட்கவில்லை. தன்னுடைய காதலில் கார்த்தி உறுதியாக இருக்கவே, இளம்பெண்ணும் வேறு வழியின்றி காதலை ஏற்றுக்கொண்டார்.

முதல் காதல்
இதனையடுத்து இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். கார்த்தி இளம்பெண்ணை தனிமையில் அடிக்கடி சந்தித்து காதல் மொழி பேசியுள்ளார். இந்த காதல் விவகாரம் அரசல் புரசலாக அக்கம் பக்கத்தில் தெரிய வந்துள்ளது. இப்படியாக கார்த்தியின் வீட்டிலும் விஷயம் தெரிய வரவே அவர்கள் கார்த்திக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளனர். இந்த இரண்டு விவகாரங்களும் ஒரு பக்கம் இருக்கையில், கார்த்தி மற்றொரு பெண்ணிடம் பழக தொடங்கியுள்ளார். இந்த பழக்கமும் காதலாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணமான இளம்பெண்ணுடன் நேரத்தை செலவிடுவதை கார்த்தி தவிர்க்க தொடங்கியுள்ளார்.

வேறு காதல்
இதனால் சந்தேகமடைந்த அப்பெண் ஏன் என்னை தவிர்க்கிறாய் என்று கேட்டிருக்கிறார். இதற்கு கார்த்தி உண்மையான காரணம் எதையும் கூறவில்லை. ஒரு கட்டத்தில் விஷயம் குறித்து தொடர்ந்து கேட்டதில் கார்த்தி தான் மற்றொரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரைதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத திருமணமான இளம்பெண், "என்னை காதலிப்பதாக கூறி தனிமையில் இருந்து அனைத்தையும் அனுபவித்துவிட்டு இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறுகிறாயே? இது நியாயமா?" என்று கேட்டிருக்கிறார்.

சண்டை
இதற்கு கார்த்தி முறையாக பதிலளிக்கவில்லை. மேலும் இனி தன்னை சந்திக்க வேண்டாம் என்று கூறி செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமணமான இளம்பெண், கார்த்தியின் புதிய நம்பரை கண்டுபிடித்து கடுமையாக சண்டையிட்டுள்ளார். பின்னர் இறுதியாக ஒரு முறை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு கார்த்தியும் நேரில் வந்திருக்கிறார். இதில் இளம்பெண் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய கார்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஆசிட்
அதாவது இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கார்த்தி மீது வீசியுள்ளார். இதில் அவர் முகம், கழுத்து, மார்பு என பல்வேறு இடங்களில் தோல் உரிந்துள்ளது. இதை எதிர்பார்க்காத கார்த்தி வலியில் அலற அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications