கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
ஈரோடு : பண்ணாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த தூய்மை பணியாளரை அருகே அழைத்து நீ தான் என் தங்கச்சி என அன்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை திரைப்பட நடிகர் வடிவேலு கோயிலுக்கு வந்தார். நடிகர் வடிவேலு கோயிலுக்கு வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பக்தர்கள் அவரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

நடிகர் வடிவேலு
இதைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலுவை கண்டவுடன் பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அவருடன் சேர்ந்து ஆர்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உற்சாகம்
அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை வாம்மா நீ தான் என் தங்கச்சி என கூறியபடி ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நடிகர் வடிவேலு.

படப்பிடிப்பு
திம்பம் மலைப்பாதை வழியாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு மைசூர் செல்வதாக தெரிவித்தார். நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்திரமுகி
நடிகர் வடிவேலு தற்போது இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் ஆகியோருடன் சந்திரமுகி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி படக்குழு அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு கலகலப்புடன் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications