தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் என்னை மதிப்பதில்லை! மீண்டும் பரபரப்பை கிளப்பும் அதிமுக எம்.எல்.ஏ!
ஈரோடு: நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை வருவாய் துறை அலுவலர்கள் உட்பட அரசு அதிகாரிகள் யாரும் மதிப்பதேயில்லை என மீண்டும் பரபரப்பு புகாரை முன் வைத்திருக்கிறார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பண்ணாரி. எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியான இவர், தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன் வைத்து வருகிறார்.

அதாவது தனது தொகுதியில் உள்ள ஒரு அரசு அதிகாரிகள் கூட எம்.எல்.ஏ. என்ற முறையில் தன்னை மதிப்பதேயில்லை என்றும் தாம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதே இதற்கு காரணம் எனவும் வேதனைத் தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே இப்படி ஒரு புகாரை தெரிவித்திருப்பதால் இது சற்று சீரியஸான விவகாரமாகவே பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் பாகுபாடா அல்லது அவர் சொல்வது போல் ஜாதி தான் காரணமா என்பது குறித்தெல்லாம் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் தாம் பரிந்துரை செய்து கொடுத்த மனுக்களில் ஒரு மனு மீது கூட தீர்வு காணப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக உள்ளது. இன்னும் 2 மாதங்கள் அரசு அலுவலர்களுக்கு கெடு விதித்துள்ள பண்ணாரி எம்.எல்.ஏ., அதன் பிறகு தன்னை உதாசீனப்படுத்தும் போக்கு தொடர்ந்தால் அரசு அலுவலகங்களில் மக்களுடன் குடியேறும் போராட்டத்தை நடத்துவேன் எனக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
அரசியல்வாதிகளை போல் அரசுப் பதவிகளில் உள்ள ஒரு சில அதிகாரிகளும் அரசியல் செய்வது இது போன்ற குற்றச்சாட்டுகள் மூலம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications